கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சனி, 14 மே, 2011

புலம்பெயர் தமிழ் மக்களின் குடாநாட்டுச் சொத்துக்களில் கண் வைத்திருக்கும் இராணுவம்!

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் அசையாச் சொத்துக்களுக்கு சட்டபூர்வமற்ற உரிமையை பலர் கோரி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதனை சீர் செய்யும் வகையில் வெளிநாட்டில் உள்ளோர் தங்களின் உடைமைகளுக்கு உரிய பொறுப்பாளர்களை சட்ட ரீதியாக ஒழுங்கமைத்துக்கொள்ளுமாறு நான் இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"சட்ட ரீதியான பொறுப்பாளர்களிடம் குடா நாட்டு காணிகள் ஒப்படைக்கப்படுவதையே அங்குள்ள இராணுவத்தினரும் விரும்புகின்றனர்" என யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எனவே குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த 430, 000 பேரின் சொத்துக்கள் தொடர்பான சட்டரீதியான ஆவணங்களை அவர்கள் மீளவும் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக உறுதிபடுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குடா நாட்டிற்கு வந்து தமது அசையா சொத்துக்களை பார்வையிட்டு உரிய பொறுப்பாளரிடம் சட்ட ரீதியாக ஒழுங்கமைத்து கொள்ளுமாறு இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார். 

தமிழ் மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்டமைப்புக்கள் இருக்கின்றன.. 

அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதை விடுத்து இராணுவத்தின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இணங்க செயற்படுவதானது குடாநாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சியா இடம்பெறுகின்றது என்ற சந்தேகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே மீண்டும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது....

0 comments:

கருத்துரையிடுக