கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

தொழிநுட்ப செய்திகள்

ஜிமெயிலில் டுவிட்டரை பயன்படுத்த


டுவிட்டர் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் தளம் ஆகும். சமூக இணையதளத்தில் அதிகமாக பயன்படுத்தபடும் தளத்தில் இந்த தளமும் ஒன்றாகும்.
சாதாரண மனிதனில் தொடங்கி மிகப்பெரிய நபர்கள் வரை டுவிட்டர் தளத்தில் கணக்கு வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயவிவரங்களையும், பிடித்த செயல்களையும் அவ்வப்போது டுவிட்டர் தளத்தில் வெளியிடுவார்கள்.
செய்திதாள்களில் கூட வெளிவராத செய்திகள் இதுபோன்ற சமூக இணையதளங்களில் காண முடியும். இதுபோன்ற செய்திகளை நாம் டுவிட்டர் தளத்தில் நம்முடைய கணக்கில் நுழைந்த பின்புதான் காண முடியும்.
ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்றும் போது நாம் தனியாக இந்த தளத்திற்கு சென்று இதுபோன்ற செய்திகளை காண முடியாது. டுவிட்டரில் பதிவிடும் செய்திகளை ஜிடால்கில் இருந்தவாறே காண முடியும். இதற்கு ஒரு தளத்தில் ஜிமெயில் கணக்கு மற்றும் டுவிட்டர் கணக்கினை சமர்பிக்க வேண்டும்.
இந்த தளத்தின் நுழைந்து முதலில் கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்து கூகுள் கணக்கின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக டுவிட்டர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு Allow என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து ஜிடால்கினை ஓபன் செய்து அதில் புதியதாக வந்துள்ள நண்பர் அழைப்பினை ஒகே செய்யவும். அவ்வளவு தான் இனி டுவிட்டரில் பதியப்படும் உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களால் ஜிடால்கில் இருந்தவாறே பெற முடியும்.
இந்த வசதியினை நீங்கள் ஜிமெயில் அரட்டையிலும், ஆர்குட் அரட்டையிலும் பெற முடியும். விரும்பினால் நிறுத்திக் கொள்ளவும் முடியும். இந்த வசதியின் மூலம் இனி தனியாக டுவிட்டர் கணக்கினை திறக்க வேண்டிய அவசியம் இருக்காது.


இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க


இணையதளங்களை பார்வையிடும் பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று சிலர் கருதுவதுண்டு.
ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Primo Pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். எந்த இணைய பக்கத்தை PDFஆக சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்தை திறந்து கொண்டு File மெனுவில் Printஐ அழுத்த வேண்டும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் Primo Pdf  என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Create PDFஐ அழுத்த வேண்டும்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இணைய பக்கமானது Pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும். PDF உருவாவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் Save Asல் Specific Folder என்பதை தேர்ந்தெடுக்கவும்.


புகைப்படங்கள் மூலம் சம்பதிப்பதிப்பது எப்படி? How to Make Money Selling photos?

புகைப்படங்களை விற்று நாலு காசு பார்க்க வேண்டுமா?
கையில் டிஜிட்டல் கேமிராவை வைத்துக்கொண்டு சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறீகளா? உங்கள் கையில் இருப்பது வெறும் கேமரா மட்டுமன்று, அது எளிதாக நாலு காசு பார்க்க உதவும் கருவி. இணையத்தில் உள்ள காசு பார்க்கும் வழிகளில் இதுவும் ஒரு எளிய வழி. இதோ, நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கான பதில்கள்.

1. இந்த வேலையில் உங்கள் முதலீடு - சைபர் (இது நூற்றுக்குநூறு உண்மை!!)
2. குறைந்தப்பட்ச தகுதி - கேமிராவை போக்கஸ் செய்து படம் எடுக்கத்தெரிந்திருந்தால் போதுமானது. இதை ஒரு சின்னக் குழந்தை கூடச்செய்ய முடியுமே!
3. என்னத்தை போட்டோ எடுப்பது?
சாதாரனமாக நாம் அன்றாட வாழ்கையில் பார்க்கும் பறவைகள் இடங்கள் இயற்கைக் காட்சிகள் மலர்கள் நிகழ்வுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் என பலபலவற்றை போட்டோ எடுக்கலாம். எது மாதிரியான படங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதற்கு, எடுத்துக்காட்டு படங்கள் சில.
4. எவ்வளவு சம்பாதிக்கலாம்? அது நீங்கள் எத்தனை போட்டோக்கள் எடுக்குகிறீர்கள் என்பதை பொறுத்தது. நிறைய போட்டோ எடுத்தா நிறைய காசு! ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
5. “யார் நான் எடுத்த போட்டோக்களை வாங்குவது?” என்று கேட்கிறீகளா? உங்கள் போட்டோக்களை வாங்குவதற்கு எத்தனையோ இணையதளங்கள் உள்ளன.
6. எப்படி போட்டோக்களை அனுப்பவது? மிகவும் சிம்பிள்! முதலில் இந்ந பிலாகின் கடைசியில் பகுதியில் வரும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணையதளத்திற்கு அப்லோட்(Upload) செய்து கொள்ளலாம்.
7. நீங்கள் எடுத்த போட்டோக்களை ஏன் அவர்கள் வாங்க வேண்டும்?இணையத்தில் எத்தனையோ இணையதளங்கள் பிறரிடம் இருந்து போட்டோக்களை வாங்கி அவை விற்கின்றன.
8. மேலும் கிடைக்ககூடிய பயன்கள்: “பிறரிடம் நானே விற்பதற்கும் இது போன்ற இணையதளத்தில் இட்டு விற்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்குறது?” என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது!
) “Stock Images” என்றழைக்கப்படும் புகைப்படங்களை விற்கும் இணையதளங்களில் ஆயிரக்கனக்கான போட்டோக்கள் வெவ்வேறு பிரிவுகளில் வரிசைப் படுத்தப்பட்டு விற்பனைக்கு இருக்கும். இந்ந தளங்களுக்கு போட்டோ வாங்க வரும் வாடிக்கையாளர்களும் அதிகமாக இருப்பார்கள். எனவே நீங்கள் எடுத்த போட்டோ பலரைச் சென்றடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

) ஒருவர் உங்கள் போட்டோவை வாங்கியவுடன் அத்துடன் அந்ந போட்டோ தீர்ந்து விடாது. எடுத்துக்காட்டிற்கு நீங்கள் வற்பனைக்கு வெளிவிட்ட ஒரு போட்டோவை ஒருவர் வாங்கியவுடன்இ மீண்டும் அந்த போட்டோவை வேறோருவர் வாங்கலாம். எனவேஇ ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு கமிசன் தொகை கிடைக்கும். இது ரொம்ப நல்ல திட்டம் தானே?
) வாழ்கை முழுவதும் பணம் கிடைக்க வாய்பு: போட்டோ எடுப்பதோடு உங்கள் வேலை முடிந்நது! ஒவ்வொரு முறையும் உங்களது போட்டோ வாங்கப்படும் போதும் எங்களுக்கு பணம் கிடைக்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்:
இங்கே தரப்பட்டிற்கும் விதிமுறைகள் பொதுவாக பெரும்பாலான தளங்களில்எதிர்பார்க்கப்படுபவை. இது ஒவ்வொரு தளங்களுக்கும் வேறுப்படும்.
) நீங்கள் விற்க்கும் போட்டோக்கள் கண்டிப்பாக நீங்கள் எடுத்த அசல் போட்டோக்களாக இருக்க வேண்டும். மேலும் பெரும்பாலான தளங்களில் உள்ள விதிமுறைப்படி நீங்கள் எடுத்திருக்கும் போட்டோவில் இடம்பெற்றிருக்கும் மனிதர்களே அல்லது போட்டோவில் தெரியும் இடத்தின் சொந்தக்கரரோ போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதம் அளித்த விண்ணப்பத்தை (இதற்கான விண்ணப்ப படிவத்தை அவர்கள் தளத்தில் இருந்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்) ஸ்கேன் செய்து, நீங்கள் எடுத்த போட்டோவுடன் அப்லோட் செய்தால் மட்டுமே உங்களது போட்டோ விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
) ஒரு தளத்தில் விற்பனைக்கு வெளியிட்ட போட்டோவை வேறு தளத்தில் விற்க்கூடாது.
) நீங்கள் எடுக்கும் போட்டோவின் அளவு குறைந்தது 2 எ.ம்பி யாக இருக்க வேண்டும். சாதரனமாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் படங்கள் இந்த அளவு இருக்க வேண்டும்.
இவையனைத்தும் அடிப்படை விதிமுறைகள். மேலும் விபரங்களுக்கு அந்தந்த தளங்களை பார்க்கவும்.கீழே தரப்பட்டிருக்கும் இணையத்தில் சிறந்த போட்டோக்களை விற்கும், வாங்கும் இணையதளங்கள் தேர்தேடுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. அவற்றில் உறுப்பினராக சேரவும். பின்பு நீங்கள் எடுத்த போட்டோக்களை உங்கள் கணிப்பொறியில் இருந்தே அவர்கள் இணைதயளத்திற்கு அப்லோட்(upload) செய்து கொள்ளலாம்.
நல்ல போட்டோக்களை எடுங்கள் பணம் உங்களை தேடி வரும். வாழ்த்துக்கள்!

Fotlia - Click to Join




ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பது? How to insert ads in posts?

அன்பர் ஒருவர் ப்ளாக் போஸ்ட்டுகளுக்கிடைய எப்படி விளம்பரங்களை இணைப்பதென்று கேட்டிருந்தார்.

முதலில் இணையப்பக்கங்களை உருவாக்கும் எச்.டி.எம்.எல் என்ற (HTML - Hyper Text Markup Language) மொழியை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். சில அடிப்படை விசயங்கள் தெரிந்திருந்தால் போதுமானது. விளம்பரத்தை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று, எழுத்து வகை, மற்றோன்று பட வகை விளம்பரம். இந்ந விளம்பரத்தை உருவாக்க பயன்படுத்தப் படும் எச்.டி.எம்.எல் டேகுகளைப் பற்றிப் பார்ப்போம்.

எழுத்து வகை விளம்பரம்.

இந்த வகை விளம்பரங்களை உருவாக்குவதற்கு அன்கர் டேக் (Anchor tag) பயன்படுத்தப்படுகிறது. இங்கே, வேறு ஒரு பக்கத்திற்கு இனைப்பை (link) ஏற்படுத்துகிறீர்கள். உங்கள் விளம்பரம் கிளிக் செய்யப்படும் போது விளம்பரதாரர் பக்கம் காட்டப்படும் அவ்வளவு தான்! இந்த டேகின் வடிவம் இதுதான்.
முதலில் நோட்பேடை திறந்து வைத்துக் கொள்ளவும். அதில் மேலே உள்ளது போல டைப் செய்துக் கொள்ளவும். அடைப்பு குறிகளுக்குள் இருக்கும் URL of the website என்னும் வாக்கியத்தை நீக்கிவிட்டு, உங்களுடைய அப்பிலியேட் யு.ஆர்.எல்லை பேஸ்ட் செய்யவும். Your text goes here என்பதற்கு பதிலாக, எதற்க்காக லிங்கை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடலாம்.
இங்கு நாம் வாடிக்கையாளர்களை விளம்பரதாரர் பக்கத்திற்கு இட்டு செல்லப் போகிறோம். எனவே குறிச் சொற்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு நிங்கள் புத்தகங்களை விற்கும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுத்தால், ‘சிறந்த புத்தகங்கள் இங்கே கிடைக்கும்’ என பயன்படுத்தலாம் கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.


மேல் உள்ள எ.ச்.டி.யமல் ப்ளாக்கர் போஸ்டில் ஒட்டவும்.
இதேல்லாம் எனக்கு கஷ்டமாக தெரிகிறேதே என நினைத்தால், இதோ எளிய முறை ஒன்று உள்ளது. வலைப்பதிவில் தேவையான இடத்தில், இணைப்பை எற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள சொல்லையோ அல்லது சொற்றோடரை தேர்வு செய்யவும். பின்பு ப்ளாக்கர் போஸ்ட் பேனலில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

பின்பு வரும் வின்டோவில் யு.ஆர்.ல் டெக்ஸ்ட் பாக்ஸில் URL லை பேஸ்ட் செய்யவும். ஓ.கே பொத்தானை அழுத்தவும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.

எச்.டி.எம்.எல் பற்றி மேலும் அறிய, எச்.டி.எம்.எல் மொழி இலக்கணத்தை வகுக்கும் W3School இடமிருந்து இலவசமாக கற்றுக் கொள்ளலாம்.





இன்டர்நெட் தரும் வேலை!

இன்டர்நெட் தரும் வேலை! ஆமாங்க! மைக் பேக் (Mike Peg) - கன்னடா நாட்டுக்காரர். இவருக்கு கூகுளில் பணிப்புரிய வாய்ப்பு கிடைத்தது. இவர் செய்ததேல்லாம் இது தான்! கூகுள் மேப்ஸ் பற்றியும், அதன் பயன்பாடுகளையும் பற்றி மிக அருமையாக தன்னுடைய ப்ளாக்கில் எழுதினார். உதாரணத்திற்க்கு கூகுள் மேப்ஸைஎப்படி 100 வழிகளில் பயன்படுத்தலாம் என "நச்சுன்னு" ஒரு பதிவை எழுதினார். கூகுள் இவரது வலைப்பதிவை கவனிக்காமல் இல்லை. இவரது திறமையை மதித்து Google Maps APIஇல் Product Marketing Managerஆக பணிப்புரிய வாய்ப்பளித்தது!

உங்கள் திறமைகளை இணையத்தில் காட்டுங்கள்! உங்கள் திறமைகளை கவனிக்க இங்கே ஆட்கள் உண்டு! உங்கள் திறமைகளை மற்றவர்கள் அறியும் படி உங்களுக்கேன ஒரு வலைப்பதிவை தொடங்கி "பட்டைய கிளப்புங்க!"

இன்டெர்நெட்டில் பணம் சம்பாதியுங்கள்

   இந்த உலகத்தில் அனைவருமே ஏதோ ஒரு வழியில்  சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்துகொள்வதில்லை... அதனால் தான் உண்மையான தகவல்களை தேடி எடுத்து ஒரு தளம் ஆக்கி இருக்கிறேன்.இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த இது கண்டிப்பாக உதவும் என நம்புகிறேன். இங்குள்ள கம்பெனிகள் அனைத்தும் தத்தமது நாட்டு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருக்கும் அனைத்து தளங்களுமே இணைந்துகொள்ள இலவசம் தான், எந்த கஷ்டமும் இன்றி செலவுமின்றி, வீட்டிலிருந்தே நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதுவும் விளம்பங்ரகளைப் பார்ப்பதற்காக

பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........

  1. விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
  2. முப்பது விநாடிகள் பாருங்கள் !!
  3. பணம் சம்பாதியுங்கள் !!!
           உங்கள்  சந்தேகங்களை "உதவிக்கு தொடர்புகொள்க"  மூலம் தெரிவிக்கலாம். வாருங்கள்! ஆன்லைனில் எப்படி எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம் .....

          எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நியோபக்ஸ்.காம் என்னும் வெப்சைட்டை சிலமாதங்களுக்குமுன்னர்அறிமுகப்படுத்தினார். இந்த வெப்சைட்டில் உள்ள ஒவ்வொரு விளம்பரத்தையும் 30 வினாடிகள் பார்ப்பதற்குபைசா) தருகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்த்துவிட்டால் அவர்கள்பார்க்கும்ஒவ்வொருவிளம்பரத்திற்கும் $0.005 (25 பைசா) தருகிறார்கள். உங்கள் அக்கவுண்டில் $2 (100 ரூபாய்) சேர்ந்தவுடன்பணத்தைஅக்கவுண்டிற்கு (விபரங்கள் கீழே) மாற்றிக்கொள்ளலாம்.

          என்ன நம்ப முடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. பிறகு முயற்சி செய்து பார்த்தேன். ( தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே! ). கீழே உள்ள வீடியோவைப் பார்த்தால் நீங்களும் நம்புவீர்கள்.


ஒருசிறியகற்பனை:
           நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
ஒரு நாளைக்கு,

          நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4)                                                                     = 4 X 0.001                  = $0.04
          உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200)                      = 200 X 0.005             = $ 1.00
                                                                                                                                                                                    ------------------------
                                                                                                                                                                                    $ 1.04 (100 ரூபாய்)
                                                                                                                                                                                    ------------------------

                                                                            ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000

எப்படி சேருவது?

  நியோபக்ஸ்.காம்- வெப்சைட்டில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 
          எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.
Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க: 
          PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட் வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.

          Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)

3. நியோபக்ஸ்.காம் செல்க: 
           கீழே உள்ள பேனரை க்ளிக் செய்க.
http://images.neobux.com/imagens/banner9.gif

4. ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க: 
           கீழே உள்ள படம் உங்களுக்கு உதவி செய்யும்.
Picture
           CONTINUE பட்டனை அழுத்திய பிறகு நீங்கள் கொடுத்த இ-மெயில் முகவரில் லாக்-ஆன் செய்து உங்கள் நியோபக்ஸ்.காம் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்யவும்.
    மேலே உள்ளதுபோல் வந்தவுடன் அந்த பக்கத்தை மூடிவிட்டு அடுத்த விளம்பரத்தை க்ளிக் செய்து மேலே சொன்னமுறையைப் பின்பற்றவும். நினைவிருக்கட்டும்: ஒரு நேரத்தில் ஒரு விளம்பரத்தை மட்டும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும். இப்பொழுது உங்கள் ப்ரொசரை மூடிவிட்டு மற்ற வேலையைப் பாருங்கள். தினமும் விளம்பரத்தை க்ளிக் செய்யமறந்து விடாதீர்கள்.

எப்படிநிறையசம்பதிப்பது?
           தினமும் $0.04 என்பது மிகச்சிறிய தொகையே ! இதை வத்துக்கொண்டு "டீ" கூட குடிக்க முடியாது. நீங்கள் உங்கள்நண்பர்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம். உங்களது நியோபக்ஸ்.காம் அக்கவுண்டின் இடது பகுதியில் உள்ள Banners என்பதை க்ளிக் செய்தால் ஒரு Referral Link தருவார்கள். அந்த லிங்கை உங்களது நண்பர்களுக்கு அனுப்பிஉங்களின் கீழ் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் நண்பர் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது ரெஜிஸ்ட்ரேசன்ஃபார்மில்Referer என்ற இடத்தில் உங்களது யூசர்நேமை போடச்சொல்லுங்கள்.

குறிப்பு: நீங்கள் உங்களின் கீழ் உங்கள் நண்பர்களை சேர்ப்பதற்கு நியோபக்ஸ்.காம்-இல் சேர்ந்து 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்பரங்களைப் பார்த்திருக்க வேண்டும். (ரெம்ப நம்பிக்கையான வெப்சைட். அதனால்தான் இந்த கெடுபிடி.)

மற்றும்

           நியோபக்ஸ்.காம் போல் உள்ள மற்ற சில வெப்சைட்டுகளிலும் சேருங்கள்.இங்கே க்ளிக் செய்யவும்

குறிப்பு: இந்த வெப்சைட்டுகளில் நீங்கள் சேர்ந்த உடனே உங்கள் நண்பர்களை சேரச் சொல்லலாம்

லாக்-ஆன் ஆன பிறகு மீண்டும் இடது மேல் மூலையை பாருங்கள். கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.
Picture
           உங்கள் யூசர்நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க ViewAdvertisements-ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்
Picture
           இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய வின்டோவில் திறக்கப்படும்.


இப்பொழுது இடது மேல் மூலையில் இதுமாதிரி காண்பீர்கள்.
Picture
           பிறகு இப்படி,
Picture
           இறுதியாக இப்படி,
Picture
செய்யவேண்டியவை:

  1. தினமும் விளம்பரத்தைக் க்ளிக் செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப்பெறமுடியும்.
  2. நீங்கள் நியோபக்ஸ்.காம்-இல் சேர்ந்து 30 நாட்கள் மற்றும் 100 விளம்பரங்களை பார்த்தபின் உங்களதுநண்பர்களை அவர்கள் (நியோபக்ஸ்.காம்) கொடுத்த REFERRAL LINK மூலமாகசேரச்சொல்லுங்கள். இதன்மூலம்நீங்கள் நிறைய வருவாயை ஈட்ட முடியும்.
  3. நியோபக்ஸ்.காமில் உள்ள போரம் (FORUM) பகுதியை நன்றாக படியுங்கள். உங்களது பல சந்தேகங்களுக்கானபதில்களை அங்குள்ள மூத்த உறுப்பினர்கள்விளக்கி இருப்பார்கள்.
  4. http://www.neobux.com/?r=johnsonpri

செய்யகூடாதவை:
           கீழ்கண்டவைகளில் ஏதெனும் ஒன்றை செய்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்கள் உங்கள் கணக்கை நீக்கி விடுவார்கள்.

  1. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை உருவாக்குதல்.
  2. ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை பயன்படுத்துதல். எனவே உங்கள்நண்பர்களின் கணக்கை உங்களதுகணிப்பொறியில் லாக்-இன் செய்யஅனுமதிக்காதீர்கள்.
           அவ்வளவுதான் தினமும் (5 நிமிடம்) விளம்பரங்களை க்ளிக் செய்து, ஒருமாதம் முயற்சி செய்து பாருங்கள். பிறகு நீங்களே, "இண்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட எளிமையான வழி இல்லை" என்று சொல்லுவீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே நியோபக்ஸ்.காம்-இல் இணையுங்கள்.



உங்களுடைய பொதுவான சில சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்.

இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை. இதை எப்படி நான் நம்புவது?

நண்பர்களே!
          இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை அல்ல. நான் கடந்த இரண்டு வருட்ங்ளாக பணம் சம்பாதித்து வருகிறேன்..

          ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. ஆனால் நான் கூறுவது, உண்மையான, நம்பகமான, கடந்த இரண்டு வருடங்களாக பணம் அளித்துக்கொண்டிருக்கின்ற ஒரு இணையதளம். அதுவும் இதில் சேரவோ அல்லது சம்பாதிக்கவோ முதலீடு செய்ய தேவை இல்லை என்பது இதன் தனிசிறப்பு. தினமும் 10 நிமிடங்கள் போதும். பணக்காரராகி விடலாம்.

நான் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாமா?

          கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களது IP Addressமற்றும் MAC Address ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து உங்கள் அக்கவுண்டை DELETE பண்ணி விடுவார்கள். உங்களிடம் இரண்டு கணிப்பொறி மற்றும் இரண்டு Internet connection இருந்தால் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.

சரி. நீங்கள் சொன்ன வெப்சைட்டுகளில் சேர்ந்து பணம் சம்பாதித்துவிட்டேன். எப்படி என் பாக்கெட்டிற்கு வர வைப்பது?

          கணினி மூலம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லும் முன்பாக அப்படி சம்பாதிக்கும் பணத்தை நாம் பெற்றுக் கொள்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்காகத்தான் இருக்கவே  இருக்கு AlertPay, PayPal.

AlertPay / PayPal என்றால் என்ன?

           AlertPay, PayPal ஆகியவை இணையதள வங்கிகளாகும். இங்குஒரு கணக்கை துவக்கி வைத்துக் கொண்டால் போதும், உங்கள் ஈ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், நீங்கள் எந்த தளங்களில் எல்லாம் இணைந்து பணம் சம்பாதிக்கிறீர்களோ அந்த தளங்களில் இருந்து பணம் அனுப்பி விடுவார்கள். நீங்களும் அந்தக் காசை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவழைத்துக் கொள்ளலாம்.இதற்கான கமிஷன் எவ்வளவு, எப்படி ரிஜிஸ்டர் செய்து கொள்வது என்பது போன்றவற்றை மேற்படி வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம். 

          AlertPay, PayPal மூலம் பணம் அனுப்பவும், பெறவும் செய்யலாம்.கணக்கு ஆரம்பிக்க எந்தச் செலவும் கிடையாது! அதே போல் குறைந்த அளவாவது நமது கணக்கில் காசு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் கிடையாது. 100 மில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கும் நிறுவனமாக இது இப்போது வளர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளிலும் செலாவணியாகும்படி செய்கிறார்கள். 

          சரி ..சரி..சீக்கிரம் சென்று கணக்கு துவங்கி கொள்ளுங்கள் .          Alertpay -ல் சேர இங்கே கிளிக் செய்யவும். PayPal -ல் சேர இங்கேகிளிக் செய்யவும்.

சரி. நியோபக்ஸ்.காம்- இல் சேர்ந்துவிட்டேன். தினமும் எனக்கு $0.04 போதாது.  எப்படி நிறைய சம்பாதிப்பது?

நியோபக்ஸ்.காம்- இல் சேர்ந்து நிறைய சம்பாதிக்க மூன்று வழிகள் உள்ளன.
  1. Direct referral
  2. Rent referral
  3. pgrade to Golden

Direct referral என்றால் என்ன?

          Direct referral என்பது உங்களுடைய Referral Link மூலமாக சேர்ந்த உங்களுடைய  நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு $0.005 கிடைக்கும். உங்களுடைய Referral Link - கை, நீங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு இந்த பக்கத்தில் சென்று எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும். நீங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் நியோபக்ஸ்.காம்- இல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். மற்றும் 100 விளம்பரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.

Rent referral என்றால் என்ன?

          உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால், நீங்கள் Referral -களை வாடகைக்கு எடுக்கலாம். ஒருReferral-க்கு ஒரு மாதம் வாடகை $0.25 ஆகும். இதன் மூலமும் நிறைய சம்பாதிக்கலாம். இதற்கான வழிமுறைகள் நியோபக்ஸ்.காமில் விளக்கப்பட்டுள்ளன.

Upgrade to Golden என்றால் என்ன?

          நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $90 செலுத்தி UPGRADE செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். நீங்கள் $0.01 உங்களது Referral க்ளிக்கிற்கும், தினமும் 8 விளம்பரங்களும் கிடைக்கும்.

          நீங்கள் UPGRADE செய்ய நான் பரிந்துரை செய்யவில்லை. ஏனென்றால் முதலீடு செய்யாமல் பணம் சம்பாதிப்பதே நமது குறிக்கோள். எனவே Direct Referral முறையே சிறந்தது



இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் விளம்பரங்களில் சொல்வது போல், நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன் மூலமாகவோ சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று சொல்லப்போவதில்லை. இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

முதலில் நாம் பார்க்கப்போவது 'Google Adsense'. இணைத்தளங்கள் வைத்திருக்கும் யாராயிருந்தாலும், தமது தளங்களில் கூகிளுடைய விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி இது. கூகிள் விளம்பரங்களை அந்தத் தளங்களில் வெளியிடும் அதே நேரத்தில், உங்கள் தளத்திற்கு வருபவர்கள் தங்களுக்குத் தேவையான தேடுதல்களை மேற்கொள்ளவும் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) வழி செய்கிறது.

உங்கள் தளம் எதைக்குறித்தது, அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எத்தகையவை, இவற்றின் அடிப்படையில், உங்கள் தளத்தைப் பார்வையிடுபவர் அதில் உள்ள கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களைச் சொடுக்குகையில் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?

உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் சொடுக்கப்படுகையில், கூகிளுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கூகிள் ஆட்சென்ஸில் (Google Adsense) உறுப்பினராவது எப்படி?

உங்களுக்கென்று ஒரு இணைத்தளம் மட்டும் இருந்தால் போதும். கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிடுவது இலவசம்தான். இதற்காக கூகிள் நிறுவனத்திற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகளின் படி உங்களது இணைத்தளமானது இருக்கவேண்டும். தகுதி அளவீடுகளைப் பூர்த்தி செய்யவேண்டும். இவை இரண்டும் இருப்பின் நீங்கள் உங்கள் இணைத்தளத்தில் கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) விளம்பரங்களை வெளியிட விண்ணப்பிக்கலாம். அந்நிறுவனம், உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உங்களுக்கு அனுமதி வழங்குவதா இல்லையா என முடிவு செய்யும். நீங்கள் விண்ணப்பித்த ஒரு வார காலத்துக்குள் அனேகமாக, உங்கள் விண்ணப்பம் ஏற்கவோ, நிராகரிக்கவோ படலாம். உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படின், நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் தொடங்கலாம். பின்னர், உங்களுக்கு ஒரு 'HTML Code' வழங்கப்படும். அக்குறியீட்டு எண்ணை, உங்களது தளங்களில் நீங்கள் பயன்படுத்தினால், கூகிள் தன்னிடம் உள்ள சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் தளத்தின் தலைப்பு, அதன் உள்ளடக்கம் இவற்றுக்குத் தொடர்புடைய விளம்பரங்களை உங்கள் தளத்தில் காட்சிப்படுத்தும். ஒரு சொடுக்கலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கூகிளுக்கு மட்டுமே தெரிந்த இரசியம். அது ஒரு சென்ட் ஆகவும் இருக்கலாம், பத்து டாலராகவும் இருக்கலாம்.

கூகிள் ஆட்சென்ஸ் கூறும் விதிமுறைகள் என்னென்ன?

1. உங்களுக்கு என்று ஒரு இணைத்தளமோ (Website), வலைப்பூவோ (Blogspot) இருக்கவேண்டும். இது வரை இல்லையென்றால் இனிமேல் நீங்கள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். (ஆனால், சில நேரங்களில் உங்கள் இணைத்தளம் அல்லது வலைப்பூ உருவாகி ஆறுமாதமாவது ஆனால்தான்,கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்க முடியும். குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தளங்கள்.)
2. உங்கள் வயது பதினெட்டுக்கு மேற்பட்டிருக்கவேண்டும்.
3. கூகிள் ஆட்சென்ஸ் நிறுவனத்தின் சில நெறிமுறைகளை மீறாமல் இருக்கவேண்டும். (இவற்றை விரிவாகப் பின்னர் காணலாம்.)

உங்கள் கணக்கைத் துவக்குவது எப்படி?

முதலில் கூகிள் ஆட்சென்ஸுக்கு நீங்கள் உறுப்பினராவதற்காக விண்ணப்பிக்கவேண்டும். உங்கள் முழுப்பெயர் (உங்கள் சான்றிதழ்களில், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ளபடி), உங்கள் முழு முகவரி, உங்கள் இணைத்தளத்தின் முகவரி (URL), இவை அனைத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும். கூகிளின் விதிமுறைகளை மீறமாட்டேன் என்ற உறுதிமொழி கொடுக்கவேண்டும். உங்கள் தளம் கூகிளின் நெறிமுறைகளை மீறாமல் இருப்பின், உங்களுக்கு முன்னால் கூறியபடி ஒர் எண் கொடுக்கப்படும். உங்கள் தளத்துக்கு வருபவர்கள் மட்டுமே விளம்பரங்களைச் சொடுக்கவேண்டும். நீங்களே உங்கள் விளம்பரங்களைச் சொடுக்கினால் அது விதிமுறை மீறல். அப்படிச் செய்பவர்களின் கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடும்.

உங்கள் கணக்கில் பத்து டாலர்கள் சேர்ந்தபின், உங்கள் முகவரியைச் சரிபார்க்கும் விதமாக, கூகிள் உங்களுக்கு PIN எண்ணை தபால் மூலமாக அனுப்பும். அந்த எண்ணை நீங்கள் உங்கள் கணக்கில் பதிவு செய்தல் மூலம் உங்களுடைய முகவரி சரிபார்க்கப்படுகிறது. கூகிளில் இருந்து நீங்கள் பணப்பட்டுவாடா ஆக இது அவசியம்.

ஒவ்வொரு முறையும் உங்கள் கூகிள் கணக்கில் குறைந்தபட்சமாக 100 டாலர்கள் சேர்ந்தபின், உங்களுக்கு 'கூகிள் நிறுவனத்தில் இருந்து காசோலை அனுப்பப்படும். ஆனால் உடனடியாக அல்ல. உங்கள் கணக்கில் மார்ச் மாதம் 20ம் நாள் இருப்புத்தொகை நூறு டாலர்களைத் தாண்டினால், அது பரிசீலிக்கப்பட்டு, (விதிமுறை மீறல்கள் உள்ளதா இல்லையா என்று), ஏப்ரல் மாதம் கடைசியில் உங்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படும். உங்கள் பணம் கைக்கு வர மே மாதம் 10 முதல் 15 தேதி ஆகிவிடக்கூடும். நீங்கள் கூகிள் ஆட்சென்ஸ் கணக்கைத் துவக்குகையில் கொடுத்த முகவரிக்குக் காசோலை அனுப்பப் படும்.

கூகிள் ஆட்சென்ஸ் விதிமுறைகள் என்னென்ன?

உங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை நீங்களே சொடுக்குதல் கூடாது. அதே போல், நீங்களே உங்கள் தளத்திற்கு வருபவர்களை, விளம்பரங்களைச் சொடுக்குமாறு கூறுதல், உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் விளம்பரங்களைச் சொடுக்கச் செய்தல் இவையும் நெறிமுறைகளுக்குப் புறம்பானவை. உங்கள் தளத்திற்கு வருபவர்களுக்கும், விளம்பரங்களைச் சொடுக்குபவர்களுக்கும் சரியீடு செய்தல், விளம்பரங்களுக்குப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு, விளம்பரங்களைச் சொடுக்க வகை செய்தல் இவையும் நெறி முறைகளை மீறியவையே! இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுடைய கணக்கை கூகிள் ஆட்சென்ஸ் முடக்கிவிடக்கூடும். உங்கள் தளம் ஆபாசம், வன்முறை, இன,மொழி, நிற வெறிகளைத் தூண்டுவதாக இருப்பின், உங்கள் தளத்தை கூகிள் ஆட்சென்சுக்குப் பயன்படுத்த முடியாது.
google-adsense