கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - உதயன் செய்தியாளர் மீதும் தாக்குதல்


யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. 
யாழ் பல்கலைக் கழகத்தில் ஈ.பி.டி.பி ஆதரவு மாணவனை மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிப்பதற்காக தற்போதைய தலைவரை பல்கலைக்கழகத்திலிருந்து துணைவேந்தர் நீக்கியுள்ளார்.
அதனை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





இதன்போது அச் செய்தியாளர் செய்தி சேகரித்து கொண்டிருந்தபொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது கையில் இருந்த ஒளிப்படக் கருவியும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் ஒளிப்படக்கருவியின் மெமறி சிப் அக்குழுவின் தலைவரான பீடாதிபதி ஒருவரால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்ட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அங்கே இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்டு அவர்களது அறையினுள் அச் செய்தியாளர் நீணட நேரமாகத் தடுத்துவைக்கப்பட்டார்.
தன்னை அலுவலகம் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் செய்தியாளர் கேட்டதற்கு “ நீ கைது செய்யப்பட்டிருக்கிறாய் உன்னை வெளியில் செல்ல விட முடியாது.” என கூறி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த  உதயன் அலுவலக உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நீண்ட வாக்குவாதத்தின் பின் அச் செய்தியாளரை மீட்டு வந்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு


 விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் ஈழத் தமிழர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டது பற்றி ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டு இருந்தது.
அதில் இலங்கைக்கு எதிராக ஏராளமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் பலர் நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஐ.நா. சபையின் அறிக்கையின் படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது மஹிந்தவின் உருவ பொம்மையை தூக்கில் மாட்டி வக்கீல்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் மஹிந்தவின் உருவப் பொம்மையை வக்கீல்கள் தீயிட்டுக் கொளுத்தினர்

கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு கொல்லப்பட்டுள்ளார்


இன்று ஊடகங்களில் வெளியான போர்குற்ற படங்களில்   விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல்  பானு  அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல வெற்றிச் சமர்க்களங்களில் களமாடிய தளபதி பானு இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வேதனைக்குரியதே.


2008 ல் மன்னார் களமுனையில் சாதனை புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது  கேணல் பானு "எமது பலத்தை நிரூபிக்கும்போது சர்வதேசம் வலிந்து உதவும்" என தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.

2009 ம் ஆண்டை தனது "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.

எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம்.

சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும்.

நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வீரமிக்க தளபதி சிங்கள இராணுவத்தின் கொடூரமான சீத்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்தமை தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றே.

தளபதி ரமேஸ் சித்திரவதையின் பின் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!- மனைவி சடலத்தை உறுதிப்படுத்தியுள்ளார்


இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த தளபதி ரமேஸ் அவர்கள் சித்திரவதைகளின் பின்னர் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் தற்போது வெளியான போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது.
தளபதி ரமேஸ் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த பிறகு அவர் நெருக்கடியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், அவர் இராணுவக் கனரக வாகனமொன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் என இரண்டு வீடியோக்கள் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
எனினும் தளபதி ரமேஸ் எங்கே என்ற அவரது குடும்பத்தினரின் விசாரிப்புக்கு அவரைத் தாங்கள் காணவில்லை என்ற பதிலே தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இவர் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் இணைந்து சரணடைந்தார் என்றே கருத்தும் கூறப்பட்டது.
இந் நிலையில் இன்று வெளியாகியுள்ள மற்றொரு தொகுதி யுத்தக் குற்றப் படங்களில் ஒருவர் ரமேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ரமேஸ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது.
இரண்டாம் இணைப்பு
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
ரமேஸிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.
இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.
இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்ன உறுதிப்படுத்தியிருந்தார்.
கேணல் ரமேஸின் சடலத்தை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்
சிறீலங்கா இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஸின் சடலத்தை அவரின் மனைவி திருமதி வத்சலாதேவி உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர் பரா பிரபா இதனை தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
வெளிநாடு ஒன்றில் தங்கியுள்ள வத்சலாதேவி அனைத்துலக விசாரணைகளின் போது சாட்சியமளிக்கவும் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 28 ஏப்ரல், 2011

அடாவடிகளைச் சகிக்க முடியவில்லை மேயரைச் சாடுகின்றார் நிஷாந்தன்

யாழ். மாநகர முதல்வரின் அடாவடித்தனம், தன்னிச்சையான செயற்பாடு, தான்தோன்றித்தனமான தீர்மானங்கள் என்பவற்றை சகிக்க முடியவில்லை.

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட ஈ.பி.டி.பி. அமைப்பாளர்களுக்கு செய்த முறைப்பாடுகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிட்டன.

இதனால் ஏற்பட்ட விரக்தியே ஆளும் தரப்புக்கு அளித்த ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேர்ந்தது என்றார் ஆளும் கட்சி உறுப்பினர் சு.நிஷாந்தன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுடனோ இணைந்து விடவில்லை. 

நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நேரடி பிரதிநிதியாகவே தொடர்ந்தும் செயற்படுவேன். என்னை மேயரால் கட்டுப்படுத்த முடியாது .குற்றச் செயல்கள் என்ன நடந்தாலும் அதனை தட்டிக் கேட்க தவறமாட்டேன் எனக் கூறினார்.

யாழ். நகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பதவி ஏற்ற காலம் தொடக்கம் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக திரட்டிய சான்றாதாரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நேற்று யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே நிஷாந்தன் இதனைக் குறிப்பிட்டார்.

உலகின் மிக நீளமான பேருந்து

பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது.

பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம்.

இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது.

மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

யாழப்பாண மாணவியர் இன்டர்நெட்கபேகளில் ஆண்நணபர்களுடன் உல்லாசம் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாண மாணவர்கள் தங்கள் இன்டர்நெட்கபேகளுக்கு செல்கின்றனர் அங்குள்ள வெப் கமராக்ககள் Skypeஉடன் சேர்ந்து login ஆகியநிலையில் இருந்ததைக்கூட கவனிக்காமல் காம லீலைகளில் ஈடுபடுகின்றனர்.

தர்ஸிகா என்ற பள்ளி மாணவி தன் ஆண் நண்பன் ஒருவருடன் இன்டர்நெட்கபேக்கு சென்றார். அந்த கபேயில் அவர் பயன்படுத்திய கணனியை அதற்கு முதல் இன்னொருவர் Skypeக்காக பணன்படுத்திவிட்டு Logout செய்ய மறந்து சென்று விட அவர்களின் காமலீலைகள் பல்லாயிரம் மயில்களைக்கடந்து அவுஸரேலியாவிலுள்ள ஒரு நபரின் கணனியில் பதிவாகியது.

அவர் யாழ்ப்பாண மாணவர்களின் மாணவர்களின் நிலைய கருத்தில் கொண்டு அதைனை எங்களுக்கு அனுப்பியுள்ளார். அவற்றில் பிரசுரிக்ககூடியநிலையிலுள்ள ஒரு சில படங்களை மட்டுமே இங்கு தருகிறேம்

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, பரிந்துரைகளுக்கு அமெரிக்கா வரவேற்பு

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

நிபுணர் குழு மிகவும் விரிவான முறையில், தங்களது விசாரணை மற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவாக குழு வரையறுத்துப் பரிந்துரைத்துள்ளது. நீதி கிடைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்தை தழைக்கச் செய்வது, மறு கட்டமைப்பு, மறுசீரமைப்பு, மனித உரிமையை நிலைநாட்டுவது தொடர்பாக அது பலவற்றைப் பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட பொதுச் செயலாளர் பான் கி மூன் முடிவெடுத்ததை நாங்கள் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

போருக்குப் பின்னர் இலங்கையில் ஒளிவுமறைவற்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். புண்பட்ட தமிழ் மக்களின் புணர்வாழ்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மறு சீரமைப்பு, மறு குடியமர்த்தல் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

தற்போது இந்தக் குழுவின் அறிக்கை மூலம் சுயேச்சையான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது உறுதியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற வாதம் வலுப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு விரிவான பதிலைத் தர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கூறியிருப்பதற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது என்றார் ரைஸ்.

புதன், 27 ஏப்ரல், 2011

இணையப் பக்கங்களை PDF போர்மட் கோப்பாக சேமிக்க

இணையதளங்களை பார்வையிடும் பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று சிலர் கருதுவதுண்டு.
ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Primo Pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். எந்த இணைய பக்கத்தை PDFஆக சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்தை திறந்து கொண்டு File மெனுவில் Printஐ அழுத்த வேண்டும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் Primo Pdf  என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Create PDFஐ அழுத்த வேண்டும்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இணைய பக்கமானது Pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும். PDF உருவாவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் Save Asல் Specific Folder என்பதை தேர்ந்தெடுக்கவும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

பாழடைந்த வீட்டில் யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த யுவதி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக ஊற்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊற்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளவரசர் திருமணம்: பரிசை நன்கொடையாக அளிக்க தனி இணையதளம் உருவாக்கம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
திருமண பரிசை அளிக்க விரும்பும் நபர்கள் தாங்கள் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இளவரசர் வில்லியம்.
நிலநடுக்கத்தால் பாதித்தவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கான சங்கம், வனவிலங்கு பாதுகாப்பு என 26 அறக்கட்டளைகளை வில்லியம் மற்றும் அவரது சகோதரர் ஹேரி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
திருமண பரிசை அளிக்க விரும்புபவர்கள் தங்களுக்கு பிடித்த அறக்கட்டளையை ஒன்றை தெரிவு செய்து அதற்கு நன்கொடை அளிக்கலாம். இதற்கென தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் யூரோ, டொலர், பவுண்ட் போன்ற நாணயங்களில் நன்கொடை அளிக்கலாம்.

ராணுவ தளங்கள் மீது குண்டு வீச இத்தாலி முடிவு

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது.
எனவே மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ராணுவமும் உள்ளது.
அதில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவ போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இத்தாலி ராணுவம் இதுவரை தாக்குதலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் இத்தாலியின் விமானப்படை போர் விமானங்களும் கடாபியின் ராணுவ தளங்கள் மீது குண்டு வீச முடிவு செய்துள்ளது.
இது குறித்து இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது கடாபியின் ராணுவ தளங்களின் மீது மட்டும் இத்தாலி போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என அறிவித்தார். இரக்கமின்றி கொன்று குவிக்கும் கடாபி ராணுவத்திடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதுவும் உடனடியாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்த உள்ளது. இதற்கான அறிக்கையை பிரதமர் பெர்லுஸ்கோனி அலுவலகம் வெளியிட்டது.

மூன்று கால்களுடன் கோழிக்குஞ்சு (படங்கள் இணைப்பு)

வாழைச்சேனை – புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள வீட்டுப்பண்ணையில் அடைகாத்த கோழியொன்று மூன்று கால்களுடன் குஞ்சு பொரித்துள்ளது.

வாழைச்சேனைப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதியான கே.ஸ்ரீ.சிவகுமரனின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.

ஏனைய குஞ்சுகள் வழமைபோன்று இருகால்களுடன் காணப்பட்ட போதிலும் குறித்த கோழிக்குஞ்சு மூன்று (03) கால்களுடன் காணப்படுகின்றது. இதனை பார்ப்பதற்காக பலர் அங்கு சென்ற வண்ணமுள்ளனர்.

மல்லாகத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டு வரும் காணியிலுள்ள கிணற்றில் மண்டை ஓடு

மல்லாகம் நீதிமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுவரும் காணியிலுள்ள கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது. அந்த மண்டை ஓடு மனிதனுடைய மண்டைஓடாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸார் அதனை ஆட்டின் மண்டை ஓடு எனக் கூறி எடுத்துச் சென்றனர் எனக் கூறப்பட்டது.நேற்று முன்தினம் குறித்த கிணற்றைத் துப்புரவாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த சமயமே மண்டை ஓடு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மண்டை ஓட்டை ஆட்டினுடையது எனத் தெரிவித்து எடுத்துச் சென்றனர்.பொலிஸார் அதனை எடுத்துச் சென்ற போது சம்பவ இடத்தில் கிராம சேவகரோ, நீதிபதியோ, சட்டவைத்திய அதிகாரியோ எவரும் சமுகமளித்திருக்கவில்லை.

அத்துடன் பொலிஸார் சம்பவ இடத்தில் தடயங்கள் தொடர்பான புகைப்படங்கள் எதனையும் எடுக்கவில்லை.இந்த மண்டை ஓடு மீட்கப்பட்டது தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இது தொடர்பாகத் தமக்கு எதுவித தகவலும் தெரியாது என்றும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்காக தமக்கு அறியத்தரவில்லை யென்றும் கைவிரித்தார்.

அந்த மண்டை ஓட்டின் புகைப் படத்தைக் காட்டிக் கேட்ட போது;நீதிமன்றம் ஊடாக ஒப்படைக்கும் போதுதான் கருத்துக் கூறமுடியும் . படத்தைப் பார்த்து கூறுவது கடினம் என்றும் தெரிவித்தார்.மீட்கப்பட்ட மண்டையோடு நேற்று மாலை வரை யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு வரப்படவில்லை.

கைத் தொலைபேசிக்காக 17 வயது யுவதி தற்கொலை!!


பருத்தித்துறையில் தனது சகோதரி தனக்கு வந்த குறுந்தகவல்களை வாசிப்பதைப் பார்த்து கைத்தொலைபேசியை சகோதரியிடம் இருந்து பறிப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் தோல்வியுற்ற யுவதி மண்ணெய் ஊற்றி எரிந்துள்ளார்.

தனக்கு வந்திருந்த குறுந்தகவல்களை தனது சகோதரி பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அதனால் அதனை பறிப்பதற்காக முயன்ற வேளை அது தோல்வியுற்றதால் சகோதரியை எச்சரிப்பதற்காக தனது உடலில் மண்ணெய் ஊற்றியதாகவும் அப்போதும் சகோதரி தொலைபேசியை கொடுக்க மறுத்த காரணத்தால் விளையாட்டாக உடலில் நெருப்பு வைத்ததாகவும் தெரியவருகின்றது.

உடனடியாக கைத் தொலைபேசி வைத்திருந்த சகோதரியும் பெற்றோரும் அலறியபடி யுவதியின் நெருப்பை அணைத்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்து நேற்று முந்தினம் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

பருத்தித்துறை மணல் வீதியைச் சேர்ந்த வின்சன்மெடோன் றொன்சியா வயது 17 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.