கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சிறப்புச் செய்திகள்





அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி, பிபிசி இவ்வாறு அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தேடுதலின்போது, பின்லேடனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சற்று நேரத்தில் இந்தச் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பின்லேடன், அமெரிக்காவின் தேடுதல் நபர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களுக்கு காரணகர்த்தாவாக பின்லேடன் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்லாடனின் மரணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்க சிறப்பு படையினருக்கும், பின்லேடன் குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரைத் தொடர்ந்து சடலம் அமெரிக்கப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

பின்லேடனின் இருப்பிடம் தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கவனத்திற்கு அமெரிக்க புலனாய்வுப்பிரிவினர் கொண்டுவந்ததாகவும், கடந்த வாரம் அவரை பிடிப்பதற்கான உத்தரவுகளை தான் வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடனின் தலைக்கு அமெரிக்க அரசு 25 மில்லியன் டொலர்களை பரிசாக அறிவித்திருந்தது.

நேற்று (01) இரவு அமெரிக்க சிறப்பு படையினர் தமது நடவடிக்கையை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வெளியில் ஆரம்பித்திருந்ததாக அமெரிக்க படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு முக்கிய தருணம், 2001 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் சமாதானத்தை விரும்பும் மக்கள் அனைவருக்கும் என முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காலம் கடந்தாவது, நீதி நிலைநாட்டப்படும் என்பதையே பின்லேடனின் மரணம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ச் புஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







பின்லேடனை பிடிக்க முற்பட்டால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: அல்கொய்தா மிரட்டல்
தங்களுடைய இயக்கத் தலைவர் பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அல் கொய்தா பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். 

அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியக் கோப்புகளை அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தத் தகவலை இப்போது தெரிவிக்கிறது. கியூபா நாட்டில் அமெரிக்கா பராமரித்து வரும் குவாந்தநாமோ சிறை முகாமில் உள்ள 780 ரகசியக் கைதிகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிய போது இந்த மிரட்டல் பற்றிய குறிப்புகள் விக்கிலீக்ஸ் இணைய தளத்திடம் சிக்கியுள்ளன.
இந்த மிரட்டலுக்கு அஞ்சித்தான் அமெரிக்காவும், பிற மேலை நாடுகளும் பின்லேடனை நெருங்கிய போதிலும் பிடிக்காமல் விட்டுவிட்டார்களா அல்லது உண்மையிலேயே அவர் இருக்கும் இடம் தெரியாமல் நழுவவிட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.
ஆனால் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தான் தளங்களாக அப்போதும் இப்போதும் விளங்குகின்றன என்பதையும், பின்லேடன் சாகவில்லை இன்னும் இவ்விரு நாடுகளில் மறைந்து வாழ்கிறார் என்பதையும் இந்த இணையதளம் தெரிவிக்கும் ரகசியத் தகவல் உணர்த்துகிறது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தைச் செலுத்தி வெடிக்க வைத்த போது பின்லேடனும் அவருடைய சகாக்களும் கராச்சி நகரில் பாதுகாப்பான ஓரு வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்து திருப்திப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் ஏமன் நாட்டில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் கோலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் கராச்சி நகரிலேயே பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 2001க்குப் பிறகே அந்தச் சம்பவம் நடந்தது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2002ல் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர். 2001ல் இந்தச் சம்பவம் நடந்த அன்றே உயிரி வேதியியல் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான ரசாயனக் கொள்முதலில் கராச்சி கடை வீதியில் இறங்கினார்.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட மறுநாளே அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கராச்சியை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓரிடத்தில் கூடினர். அமெரிக்காவுக்கும் பிற மேலை நாடுகளுக்கும் எதிராக இதே பாணியில் நீண்டகாலத்துக்கு நாச வேலைகள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என்று தங்களுக்குள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்லேடன் மட்டும் அல்லாது அவருடைய தளபதி அய்மான் அல் ஜவாஹிரியும் இந்த சதிக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். குவாந்தநாமோ சிறையில் இருக்கும் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 4 நாள்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாநிலம் சென்று தன்னுடைய தளபதிகளை அழைத்துப் பேசினார் பின்லேடன். அல்லா மீது நம்பிக்கை இல்லாத மேலை நாட்டு ராணுவத்துக்கு எதிராக கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் போராடியே தீர வேண்டும். அல்லாவின் திருப்பெயரால் போரிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
அதன் பிறகு 3 வாரங்களுக்கு பின் லேடனும் அவருடைய தளபதிகளும் ஆப்கானிஸ்தானின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து தங்களுடைய தளபதிகளையெல்லாம் எச்சரிக்கைப்படுத்தி அடுத்தடுத்து எப்படி தாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர்.
அமெரிக்கப்படைகள் தங்களை நெருங்கிவிட்டதால் கைது செய்யப்படுவோம் அல்லது கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பின்லேடனும், மூத்த நிர்வாகிகளும் ஷூரா என்று அழைக்கப்படும் பழங்குடி தலைக்கட்டுகளை அழைத்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விருந்தினர் இல்லத்துக்கு அருகிலேயே துணிகரமாக ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் பின்லேடன். தன்னுடைய அமைப்பைச் சேர்ந்த வீரர்களைப் பயிற்சி முகாம்களிலிருந்து உடனே வெளியேறி மேற்கத்திய ராணுவத்தையும் அவர்களுடைய தளங்களையும் கிடைக்கும் எந்த ஆயுதம் மூலமாவது தாக்கி அழிக்குமாறு கட்டளையிட்டார்.