கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 8 மே, 2011

கிளிநொச்சியில் மக்களை இராணுவத்தினரும் அரச அமைச்சர் ஒருவரும் அச்சுறுத்தி ஐ .நாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை


சிறிலங்கா படையினர் கடந்த முள்ளிவாய்க்கால் போரில் தமிழ் மக்கள் மீது புரிந்த மிகக் கொடுரமான இன அழிப்பு வன்முறைகள் ஐ.நா சபையால் போர்குற்றமாக அறிவிக்கப்ட்டுள்ள நிலையில். சிறிலங்கா அரசாங்கம் உலகின் முன்னிலையில் அவமானப்பட்டும் தடுமாறுகின்ற நிலையில்...
.. தனது வழமையான எதேச்சதிகாரப்போக்கில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையையும் ஐ.நாவையும் அவமதிக்கும் படலத்தை நாடு முழுதும் ஆரம்பித்துள்ளது.

இந்த சர்வாதிகார போக்கின்அடிப்படையில் சிறிலங்காப்படைகள் எந்த தமிழ் மக்கள் மீது இனவெறி நடவடிக்கைகளை மேற்கொண்டதோ அதே தமிழ் மக்களை அச்சுறுத்தி அழைத்து வந்து இன்று கிளிநொச்சியில் ஐ .நாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டையை அரங்கேற்றியுள்ளது கிராமங்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாகவும் தொலைபேசியின் ஊடாகவும் தொடர்பு கொண்ட சிறிலங்காபடையினர் மக்களை அழைத்து வரவேண்டுமென வற்புறுத்திமிரட்டியுள்ளனர்.



இராணுவ அச்சுறுத்தலுக்கு பயந்து சென்றமக்களை கொழும்பில் இருந்து வந்த அரசஅமைச்சர் சி. பி. இரத்நாயக்காவும் அவரது சகாக்களும் இராணவத்தினரும் இணைந்து ஐ .நாவுக்கு எதிரான கையெழுத்து வேட்டைக்கு நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால் மிகவும் தமிழ்மக்கள் மனம் வெதும்பி கண்;ணீருடன்.

கருத்து தெரிவித்துள்ளனர். எங்கள் குடும்பங்களில் இருந்து சிறிலங்காப்படையால் ஏராளம்பேர் கொல்லப்பட்டுள்ள உலகறிந்த உண்மையிருக்க அந்த உண்மைக்கு எதிராக நாம் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்படுவது என்ன நியாயம் என்ன தர்மம் என பாதிக்கப்பட்ட மக்கள் கண்கலங்க கூறியுள்ளனர்.

இன்று கிளிநொச்சியில் சிறிலங்கா படைத்தரப்பாலும் அமைச்சராலும் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி ஐ .நாவுக்கு எதிராக கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படையினர் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை தடைப்படுத்தியதுடன் அன்றாட பணிகளை சீர்குலைத்து தங்களின் ஐ .நாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு நிர்ப்பந்தித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக