கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 9 மே, 2011

இலங்கை இராணுவத்திலும் சில தவறானவர்கள் இருந்திருக்கிறார்கள் தான்! ஒப்புக்கொள்கிறார் யாழ்.தளபதி


எமது இராணுவத்திலும் சில தவறானவர்கள் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் இன்று அவ்வாறானவர்கள் இல்லை. மக்களுக்கு இடையூறில்லாமல்; மக்களைப் பாதுகாப்பதற்காக இராணுவம் தொடர்ந்தும் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னரும் இராணுவத்தினர் தொடர்ந்தும் இருப்பது ஏன்? அவர்கள் வீடுகளிற்குச் செல்லலாமே என சிலர் கருதுகின்றார்கள் அந்தக்கருத்துக்கள் தவறானவையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.வர்த்தகர்களுடான சந்திப்பொன்று நேற்றுக் காலை நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் மேற்கண்டவாறு கூறியுள்ளாராம்.

இதன்போது தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது,

மிக மோசமான யுத்தம் நடந்து முடிந்த வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னரும் இராணுவத்தினர் செய்யவேண்டிய பல கடமைகள் இருக்கின்றன. அதனாலேயேதான் குடாநாட்டில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றர்.

மேலும் யுத்தத்தின் பின்னர் குடாநாட்டில் இராணுவத்தினரால் வீதிச்சோதனைகள் மற்றும் காவலரண்கள் அமைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் அவற்றை விலக்கிக் கொண்டிருந்தோம்.

கடந்தாண்டு 2010 டிசெம்பர் மாதத்தில் குடாநாட்டில் சில சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றன. இதனால்தான் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களைப் பாதுகாப்பதற்காக மீளவும் வீதிச்சோதனைகளையும் ரோந்து நடவடிக்கைளையும் ஆரம்பிக்குமாறு பணிப்புரையை வழங்கும் நிர்ப்பந்தத்திற்கு நான் தள்ளப்பட்டேன்.;

எமது இராணுவத்திலும் சில தவறானவர்கள் இருந்திருக்கிறார்கள்தான். ஆனால் இன்று அவ்வாறானவர்கள் இல்லை. என்னுடைய பொறுப்பின் கீழ் எந்த இராணுவத்தினரும் தவறிழைக்க கூடாது. அப்படி ஏதாவது சம்பவங்கள் நடந்தால் எனக்கு எந்த நேரத்திலும் தெரியப்படுத்தலாம்.

குடாநாட்டில் அதிகரித்திருந்த குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக மிக கணிசமானளவில் குறைக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை குற்றச்செயல்கள் குடாநாட்டில் மட்டும்தான் நடக்கின்றதென்று யாரும் நினைக்கவேண்டாம். சமுகவிரோதிகள் வாழ்கின்ற எல்லாச் சமுகங்களிலும் இவ்வாறான குற்றச்செயல்கள் நடந்துகொண்டேதானிருக்கின்றது.

அது யாழ்பாணமாக இருக்கலாம் கண்டியாக இருக்கலாம் கொழும்பாகவும் இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் மிகப்பாரியளவில் தடுக்கப்பட்டு விட்டன.

ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலரும் என்னிடம் கடுமையாகக் கேட்டுள்ளனர். அதாவது யாழ்.குடாநாட்டில் குற்றச்செயல்கள் எதுவும் நடைபெறக் கூடாதென்று. அந்தவகையில் யாழ்ப்பாண வர்த்தகர்களிடம் நான் ஒன்றைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கப்பம் கோருதல் அச்சுறுத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த மாவட்டத்தில் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் இருக்க முடியாது. அதேபோல் யாருக்கும் எந்தத்தேவைக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு யாரும் உங்களுடன் தவறான முறையில் அணுகினால் உடனடியாக இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டு பிரச்சினையைத் தெரியப்படுத்துங்கள். என்னுடனும் தொலைபேசி இலக்கங்களுக்கூடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

0 comments:

கருத்துரையிடுக