கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 16 மே, 2011

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சற்றுமுன், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டு சத்தியபிரமாணம் செய்து கொண்டார். அமைதியான , நிம்மதியான வாழ்வைத் தமிழக மக்களுக்கு இனி தான் தரப் போவதாக இனிப்புச் செய்தியையும் அவர் தெளிவாக தெரிவித்தார். 

பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை இன்று அமைக்கிறது. 

அ.தி.மு.க. சட்டசபை தலைவராக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதாவை புதிய அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அழைப்பு விடுத்தார். முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பதை, தலைமைச் செயலர் மாலதி நேற்று ராஜ்பவனில் அதிகாரப்பூர்வமாக நிருபர்களிடம் வெளியிட்டார். சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, இன்று பகல், 12.15 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது. 

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருடன், அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி, சரத்குமார், சேதுராமன் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர் 

அதேபோல், குஜராத் முதல்வர் மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர், பரதன், தேசிய செயலர், டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர், பிரகாஷ் கராத் மற்றும் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

முதல்வர் மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, அங்கு கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விவரம், கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும். கடந்த கால இருள் பாதையில் இருந்து விலகி, தமிழக மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு புதிய அரசு செயல்படும் என்ற மகிழ்ச்சிச் செய்திகள் இனி வெளிவரும் என்ற கருத்து உருவாகியுள்ளது. 

அழைப்பு : முன்னதாக, புதிய அரசு அமைக்க, கவர்னர் விடுத்த அழைப்பை அடுத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, 11.45 மணிக்கு, கிண்டியில் உள்ள ராஜ்பவனிற்கு சென்றார். அங்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, ஜெயலலிதா கடிதம் அளித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது.

0 comments:

கருத்துரையிடுக