வெள்ளி, 13 மே, 2011
தேர்தல் தோல்வி எதிரொலி - முதலமைச்சர் பதவியிலிருந்து கருணாநிதி ராஜினாமா
சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து அவர் வழங்கினார்.
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 200 இடங்களைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் கருணாநிதி சென்றார்.
அங்கு ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். அதேபோல திமுக அரசின் ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.
Labels:
இந்திய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






0 comments:
கருத்துரையிடுக