கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 9 மே, 2011

இல்லத்தரசிகளை சின்னத்திரைப் பித்து பிடித்தவர்களாக மாற்றி வருகின்றன


தமிழ் சேனல்கள் ஒட்டு மொத்த உலகத் தமிழ் சமூதாயத்தையே சிரழித்து கொண்டிருக்கிறது.இன்றைய தமிழ்நாட்டு மெகா டிவி சிரியல்கள்பெரும்பாலான இல்லத்தரசிகளை சின்னத்திரைப் பித்து பிடித்தவர்களாக மாற்றி வருகின்றன என்றசெய்திகளை இப்போது கேட்க நேர்கின்றது.மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும் போது ஒரு பெண் செயற்கையான உலகில் இருக்க விரும்புகிறாள்.இதனாலேயே அதிக செயற்கை தனங்கள் நிறைந்த சின்னத்திரை தொடர்கள் மூலம் ஒருவித கற்பனை உலகில் உலா வர ஆரம்பிகிறாள் .
இதற்காகவே காலத்தையும் பொன்னான நேரத்தையும் வீணாக விரயம் செய்வதோடு மட்டுமல்லாமல் நமது பண்பாட்டிற்குக் கேடு விளைவிக்கும் வகையில் சின்னத்திரை தொடர்கள்சீர்கெட்ட தொடர் கதைகளாக உருமாற்றம் காணுகின்றன.பெண்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வழியினைக் காட்டுகின்றன.பெண்களின் மனத்தில் நஞ்சைப் பாய்ச்சும் போதனையைத்தான் போதிக்கின்றது.பெரும்பாலான சின்னத்திரைத் தொடர்ககளில் பெண்களைக் கேவலப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கதாபாத்திரங்களைப் படைத்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்தொடர்ந்து படைத்தும் வருகிறார்கள். பெண்களை தெய்வமாக போற்றி வந்த நாட்டில் இப்போதுபெண்களைப் பேய்களாகவும் பிசாசுகளாகவும் கொடுமைக்காரியாகவும் சிங்காரித்துகாட்டுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அநேக தனியார் தமிழ்தொலைக்காட்சிகள் இருக்கின்றன. சில தொலைகாட்சிகளை தவிர மற்ற தொலைக்காட்சிகளில் வெளிவரும் சின்னதிரைச் சிரியலகள் அனைத்தும் இதே நிலைமையைத்தான் கொண்டிருக்கின்றன. நாம் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோமானால் கதைகளில் வரும் குடும்பப் பெண்களை மிகக் கொடூரமான வக்கர எண்ணங்கள் கொண்ட கதை பெண்களாக காண்பிக்கப்படுகின்றனர். கதைகளில் முக்கிய கதாபாத் திரங்களை ஏற்கும் பெண்களின் நடிப்பைபார்க்கும் போது ஆடம்பரம்,அலட்சியம், வரம்புக்கு மீறியப் பேச்சும், கர்வம், ஆணவம்,அட்டகாசம், உறவாடிக் கெடுத்தல், சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் வைத்தல்,உறவுக்குள் தீராதப் பகையை ஏற்படுத்துதல். நல்ல கணவன்மனைவியைப் பிரித்தல்,சூதுவாது நயவஞ்சகம், துரோகம். பழி வாங்கும் பாதகச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றைப் பார்க்கின்ற நம் குடும்பப் பெண்கள் சிலர் தங்களைச் டிவியில் வரும் பாத்திரங்களாக நினைத்துக் கொண்டு குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியும் கணவன் மனைவியர்க்கிடையே பேதங்களை உண்டு பண்ணியும் ஒருவருக்கொருவர் பண்பில்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதையும் தற்போது பரவலாகக் காண்பது மிகவும்கவலைக்குரியது
ஒருவனுக்கு ஒருத்தி –ஒருத்திக்கு ஒருவன் என்கிற எல்லைகளைப் பிடுங்கி எறிந்து விட்டு மேலைக் கலாசாரங்களில் மோகங்கொண்டு சீரழிந்து தமிழ்ப்பண்பாடுகளை கேவலப்படுத்தியும் வருகின்றனர்.
ஆகவேதான், இத்தகைய தீய எண்ணங்கள் கொண்ட சகுனிகளாகவே பெண்கள் பெரும்பாலும் அக்கதைகளில் வலம் வருகிறார்கள். மேலும் பெண்களின் மனத்தைக் கவரும் வகையில் தொடர்களைப் புனைந்திருக்கிறார்கள். மேன்மேலும் வரும் தொடர்களைப் பார்க்கும்படி ஆவலைத் தூண்டி விடுகிறார்கள். தொடர்கள் பல மாதங்களுக்குக் குழப்பமான நிலையிலே கதையின் சாராம்சம் செல்கின்றன. இதன் முடிவு எப்படியிருக்குமென சில பெண்களது மனத்தளவில் போராட்டமும் எழுகின்றது.
டிவி தொடர்கள் பெண் ரசிகர்களை மன அழுத்தத்திற்குக் கொண்டு செல்கின்றன என்பது ஒரு சிலரின் அனுபவ உண்மை. இதில் மாற்றத்தை கொண்டு வர தாயாரிப்பாளார்கள் முயற்சி செய்வார்களா அல்லது
இதைப்பார்க்கும் பெண்கள், இதைப் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்வார்களா?
நாளைய சமூகத்திற்கு நல்ல கருத்துகளை தரக்கூடிய சிந்தனையை தூண்டக்கூடிய சின்னத்திரை தொடர்களை வெளியிட்டு நம் தமிழ் சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காக்க முயற்சிக்க வேண்டும் என்று அனைவரையும் பணிவண்புடன்
கேட்டூக்கொள்கிறேன்.
நான் பத்திரிக்கைகளில் படித்த செய்திகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே
தமிழ்சேனலகளைப் பற்றிபேசியதன் விளைவாக என் மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவு.
இதைப் பற்றி மேலும் விபரமாக நம் தமிழ்
பெண் பதிவாளர்கள் எழுதி நம் தமிழ் சமுதாயத்தில்ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஒரு நல்ல
மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது எனதுஆசை. என் ஆசையை கூறிவிட்டேன்.
அந்த மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் என்ன முயற்சிசெய்ய போகிறார்கல் என்பதை
பொறுத்துதான் பார்க்க வேண்டும்

0 comments:

கருத்துரையிடுக