கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 16 மே, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் வாழ்த்தும் பாராட்டும்


இன்று தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள செல்வி  ஜெயலலிதா அவர்களே!  உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அரச தலைவர்கள் எம்மை மறந்த்தாலும் எம் உறவுகளே! நீங்கள் எம்மை மறக்கவில்லை என்ற செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம். தொப்புள்கொடி உறவுக்கு ஓர் அர்த்தத்தைத் தந்து எம்மை நெஞ்சுருக வைத்துவிட்டீகளே!.
வெற்றியின் முடிவுக்கு முன்பே நீதி கேட்டு போர்குற்றம் புரிந்த இராசபக்சாவை கூண்டிலேற்றி விசாரணை செய்யவேண்டும் என முடிசூடவிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமனின் சூளுரை கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தோம்.
மக்கள் திலகம், எம்.ஜி. இராமச்சந்திரன் போல் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஈழத் தமிழர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் நிலைகொள்ள வேண்டும். இது கண்டு சிங்கள் அரசு சிலையாக வேண்டும். இந்திய அரசும் ஈழத் தமிழர் விடயத்தில் இந்திரா காந்தி அம்மையார் போல் உள்ளுணர்வோடு செயற்பட வேண்டும். இதுதானே ஈழதமிழரின் ஆசை, உலகத் தமிழரின் விருப்பம்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே!
உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும்.
உங்கள் ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும், ஐக்கிய நாடு நிபுணர்கள் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு நல்கவேண்டும், ஈழத் தமிழர் இழந்த உரிமையை மீண்டும் பெற எம்மோடு சேர்ந்து நீங்கள் செயற்படவேண்டும். இதுவே நாம் வேண்டுவதும் விரும்புவதும்.
தங்கள் அன்புள்ள
கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு

0 comments:

கருத்துரையிடுக