வன்னிக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக்கிடம் வன்னியின் தற்போதைய நிலை குறித்து மக்கள் எடுத்துக்கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முதல் தடவையாக வன்னி சென்றுள்ள அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
எனினும் இந்த நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு ஊடகவியலார்கள் அனுமதிக்கப்படவில்லை. வன்னியில் அமெரிக்காவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கே பிளேக் அங்கு சென்றிருந்தார்.
பிளேக்கை சந்தித்த மக்கள் சிறீலங்கா இராணுவத்தினரின் அழுத்தங்கள், தொழில் வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகள் அற்ற மீள்குடியேற்றங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியுள்ளனர். இராணுவத்தினர் அல்லாத கட்டிடம் ஒன்றில் பிளேக் வன்னியில் வாழும் மக்களில் சிலரையும், விவசாயிகளையும் சந்தித்திருந்தார்.
சிறீலங்கா இராணுவத்தினரின் தொடர் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் பிளேக்கிடம் தெரிவித்ததுடன், வேலைவாய்ப்பு மையத்திற்கு சென்று இளைஞர்களையும் பிளேக் சந்தித்திருந்தார்.
சிறீலங்கா அரசுக்கு பல வருடங்களாக கண்மூடித்தனமான ஆதரவுகளை வழங்கிவந்த பிளேக் வன்னியில் இருந்து மனதை உலுக்கும் பல கேள்விகளுடன் வெளிவந்துள்ளார்.
பேரின் போது மனிதக்கேடயங்களாக மக்கள் பயன்படுத்தப்பட்டமை, போரின்; பின்னர் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பிலும் பிளேக் மக்களிடம் கேட்டறிந்துள்ளார்.
முட்கம்பி வேலிகளுக்குள் தாம் எவ்வாறு துன்புறுத்தப்பட்டோம் என விளக்கமளித்துள்ள மக்கள், சிறீலங்கா இராணுவம் எவ்வாறு தடைகளை ஏற்படுத்துகின்றது, எவ்வாறு தம்மை கண்காணித்து ஒரு இராணுவ அழுத்தத்திற்குள் வைத்துள்ளது என்பது தொடர்பிலும் எடுத்துக்கூறியுள்ளனர்.
எனினும் கிளிநொச்சியை விட்டு பிளேக் வெளியேறியதும், சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுத்துறையினர் பிளேக்குடன் பேசிய மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழன், 5 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக