செவ்வாய், 10 மே, 2011
பான் கீ மூனைக் கொல்வதற்கு இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில்: அமைச்சர் மோ்வின் சில்வா
பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களைக் கொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மோ்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையொப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை இன்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மோ்வின் சில்வா மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட முற்படாதீர்கள். அவ்வாறு தலையிட முற்பட்டால் அது எந்த சர்வதேச விசாரணைக்குழுவாக இருந்தாலும் அவர்களைப் படுகொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக்குண்டுதாரிகள் தற்போதைக்குக் களனியில் தயாராக இருக்கின்றனர்.
நிபுணர்குழுவின் தலைவர் தருஸ்மான் தாயொருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்க முடியாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மோ்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக