கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

ஞாயிறு, 15 மே, 2011

மது அருந்துவதை விட மோசமானது கணணி உபயோகிப்பது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வயர் இணைப்பு இல்லாத இணைய வசதிகளுடன் கூடிய கணணிகள் ஆகியவை மனித உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியவை.
இதனால் பள்ளிகளில் அவற்றை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பு கழகங்கள் நடத்திய ஆய்வில் இவைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து விளையும் என தெரியவந்துள்ளது. இத்தகவலை டெய்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை விட கைத்தொலைபேசிகள் மற்றும் கணணிகளால் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிகளில் இவற்றின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும் இதற்கு பல எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

0 comments:

கருத்துரையிடுக