ஐ.நாவுக்கு எதிராக ஒப்பமிட கோரி, அரச தரப்பினால் அரங்கேற்றப்படும் கையெழுத்து வேட்டை, யாழ் மாவட்டங்களில் முழு வீச்சில் இடம் பெறத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதற்காக தெற்கிலிருந்து சென்றுள்ள இனவாத கும்பல் ஒன்று, படைப்புலனாய்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம், யாழ் மத்திய சிறைச்சாலை மற்றும் யாழ் நகர மத்திய பேருந்து நிலையம் என பல இடங்களிலும் இந்த கும்பல் தமது வானங்களை தரித்து நின்றவாறு, வீதியால் சென்றவர்களை மறித்து கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தினருடன் பூரண பாதுகாப்புடன் இடம்பெற்ற இக்கையெழுத்து வேட்டையில், ஒப்பமிடாது தப்பிச்செல்ல முயன்ரவர்கள் வீதிகளில் இருந்து இழுத்து வரப்பட்டதாகவும், சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில், கலாநிதி பட்டம் பெற்ற மதகுரு ஒருவரும், வணக்கத்திற்குரிய கிறிஸ்த்தவ பிரமுகர் ஒருவரும் இவ்வாறு ஒப்பமிட மறுத்த வேளையில், தரதரவென இழுத்து செல்லப்பட்டு ஒப்பம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கும்பல் பின்னர் யாழ் பிரதான வீதி வேம்படி வீதியூடாக ஆஸ்பத்திரி வீதியை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளது.
இந்நடவடிக்கைகளால் அதிருப்தியும் பீதியுமடைந்த யாழ் மக்கள், அப்பாதைகளில் செல்வதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டதுடன், அவசர அவசரமாக கதவுகளை பூட்டி வீட்டிலேயே முடங்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன் தினம் இவ்வாறானதொரு கையெழுத்து வேட்டை, தமிழீழ பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இடம்பெற்றது. தனியார் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான நூறு பேர் கொண்ட குழு ஒன்று இக்கையெழுத்து வேட்டைக்காக, வடபகுதியில் களமிறங்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
திங்கள், 9 மே, 2011
ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்திட மிரட்டப்படும் யாழ் மக்கள்! : அரச கும்பல்களால் அராஜகம்
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக