அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று சொல்லுவார்கள் இது அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் பொருந்தும். இது ஆறு வயது நிரம்பிய இந்த பிஞ்சு குழந்தைக்கு ரொம்பவே பொருந்தும். ஆம் இந்தியாவை சேர்ந்த ஆறு வயது நிரம்பிய சுமன் கௌதுன் எனப்படும் பெண் சிறுமியே இவ்வாறு சாப்பாட்டு பிரியராக இருக்கிறார்.
இந்தச்சிறுமி தனது வயதையும் மீறி எந்த நேரமும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். இதனால் இவளது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதுதினமும் இந்த சிறுமி எவ்வளவு சாப்பிடுகிறாள் என்பதை கேட்கும் போது தலை லேசாக சுற்றுகிறது. 10 கிலோ அரிசி(சோறு)- 24 முட்டை-6 லீட்டர் பால்- 5 கிலோ உருளைக்கிழங்கு- இவை போதாது என்று பக்கத்து வீடுகளையும் விட்டுவைக்கவில்லை இந்த சிறுமி. ஒவ்வொரு வீடு வீடாக சென்று உணவு வாங்கி சாப்பிடுகின்றார். இந்த சிறுமியின் இந்த நடவடிக்கை இவரது உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என டாக்டர்கள் எச்சரித்திருக்கின்றனர். இவரது உடல் ஒவ்வொருவருடமும் 15 கிலோ அதிகரித்துக்கொண்டு செல்கிறது. இவரை எப்படியாவது குணப்படுத்திவிட வேண்டும் என பெற்றோர் கல்கத்தா மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.
புதன், 11 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக