தீக் காயங்களுடன் கற்பிணிப் பெண் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது வயிற்றுக்குள் இருந்த சிசு இறந்து விட்டது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கற்பிணிப் பெண் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவனால் கொழுத்தப்பட்டு காயமடைந்துள்ளார். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கோப்பாய் இராஜ வீதியில் வசித்துவரும் 33 வயதுடைய கமலரஞ்சன் வசுமதி என்பவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படுவதுண்டு. அதன் உச்சக்கட்டமாகவே கொளுத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து விசாரித்து வருகின்றோம் என காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கோப்பாய் பிரதேசத்தில் அண்மை நாட்களாக கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் பலர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சம்பவம் இடம்பெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை விடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும். எனவும்காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், 10 மே, 2011
கணவனால் கற்பிணிப் பெண் எரிக்கப்பட்டார்!!
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக