செவ்வாய், 17 மே, 2011
ஜாக்கி சானை விற்க நினைத்த பெற்றோர்!
உலகப் புகழ்பெற்ற கராத்தே வீரரான புரூஸ் லீக்கு இணையாகப் பேசப்படுபவர் `ஜாக்கி சான்’. நடிகர், நகைச்சுவைக் கலைஞர், தற்காப்புக் கலைஞர், சண்டைக் கலைஞர், சண்டைக் காட்சி அமைப்பாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், தொழிலதிபர் என்று ஜொலிப்பவர் இவர். ஜாக்கி சான், 7.4.1954 அன்று ஆங்காங்கில் பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தையை வளர்க்கக் கூட வசதியில்லாத ஜாக்கியின் பெற்றோர், நீண்ட யோசனைக்குப் பின் குழந்தையை விற்பதற்கு முடிவெடுத்தனர். குழந்தையை வாங்குவதற்கு ஓர் ஆங்கில டாக்டரும் முன்வந்தார். ஆனால் ஜாக்கி சானின் தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர், `உங்கள் இருவருக்குமே தற்போது 40 வயதாகிறது. எனவே உங்களுக்கு இதுவே கடைசிக் குழந்தையாக இருக்கலாம். எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையை விற்க வேண்டாம்’ என்று அறிவுரை கூறினார். அதன்பின், குழந்தையை விற்கும் முடிவிலிருந்து ஜாக்கியின் தந்தை மாறிவிட்டார். ஒருவேளை ஜாக்கி சானை விற்றிருந்தால்…? அவர் நன்கு கல்வி கற்ற மனிதராக, ஆனால் யாருக்கும் தெரியாதவராக எங்கோ ஒரு மூலையில் முடங்கியிருப்பார். ஆனால் அதிகம் படிக்காத ஜாக்கி சான்தான் உலகப் புகழ் பெற்ற நடிகராகவும், மனிதநேயமிக்க மனிதராகவும் திகழ்கிறார்.
Labels:
சிறப்புச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக