ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதித்துறைக்குள் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்த முனைவதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சாட்டுகின்றார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் மூலமாகவே ஜனாதிபதி நீதித்துறைக்குள் வரம்பு மீறி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழியேற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
பிரஸ்தாப அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக பிரதம நீதியரசரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் அவர் தானாகவே ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
அதே போன்று நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை ஜனாதிபதி நியமிப்பதற்கு இடமளிக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஏனைய நீதிமன்றங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடுகின்றது.
இலங்கையின் நீதித்துறையின் 200 ஆண்டு கால வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடந்தது கிடையாது.
இலங்கையின் அரசியலமைப்புக்கும் இது மாற்றமானது. அது மாத்திரமன்றி உலகில் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை காணப்படுவதில்லை என்றும் சரத் என் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக