கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

பிரதான செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதான செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜூலை, 2012

கணனி சஞ்சிகை வெளியீடும் புதிய மென்பொருள் அறிமுகவிழாவும்

இன்று 14/07/2012 யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள Elate Computer Systems  நிறுவனத்தினரால் கணனி சஞ்சிகையும் அந்நிறுவனத்தினாலேயே முற்றிலும் உருவாக்கப்பட்ட கணனி மென் பொருள் தொகுப்பு ஒன்றும் இன்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மே, 2011

யாழ். ஊரெழு வாசியான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் உதவிப் பிரதமராக நியமனம்.

யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தை வழித்தோன்றலாகக் கொண்டவரும் சிங்கப்பூர் நாட்டின் பிரபல அரசியல்வாதியும் நன்கு உயர்கல்வி கற்று பொருளாதார நிபுணராக பிரகாசிப்பவருமான திரு தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் சிங்கப்பூர் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய திரு தர்மன் அரசியலில் மட்டுமல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக பங்கு வகித்தவர் என்று சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.

செவ்வாய், 17 மே, 2011

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி கலந்து கொள்ளலாம்! மகிந்த கலக்கம்..!



இலங்கை இனவாத சிங்கள அரசினால் சிறுபான்மைத் தமிழர்கள் அவர்தம் விடுதலைக்காக போராடிய மக்கள் எண்பதாயிரம் பேர் வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்தது ஹிட்லர் மகிந்த ராஜபக்ச அரசு.

இதே காலப் பகுதியில் அமெரிக்காவில் நடைபெற்ற தலைமை செயலர் பதவி தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக ஒபாமா தமிழர் அமைப்பு என ஒன்று உருவாக்கம் பெற்று பெரும் பங்காற்றியது .



இதன் அடிப்படையில் இம்முறை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்கநாளில் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், சட்டாமா அதிபர்கள், ரொபேர்ட் பிளேக் போன்றவர்கள் கலந்து கொண்டு அந்த மக்களின் துயரில் பங்கேற்று கொள்வதுடன் ஐ.நாவினால் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த நிகழ்வில் முக்கிய சிறப்பாளராக முன்னாள் ஐ.நாவுக்கான பேச்சாளர் கலந்து கொள்ள உள்ளதும் அவர் அங்கு மேலும் பல தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது .



இந்த ஒருங்கிணைப்பு பணிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் நேரடியாக செய்து வருவதாக சிங்கள உளவு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டு பரப்பரை ஏற்படுத்தியுள்ளது .



நாடு கடந்த தமிழீழ அரசினை முடக்கி அதன் கட்டமைப்பை சீர்குலைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி எடுத்து வருவதும் அதன் பின் புலத்தில் தமிழர்களை வைத்து அதற்கான மோதல்களை உருவாக்கி சீர்குலைவு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் பல கோடிட்டு காட்டுகின்றன.



இந்த முக்கியமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டால் நாடு கடந்த அரசு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாக திகழும் என்பதும் உலகளாவிய ரீதியில் இவை தமிழர்களின் விடுதலைப் போருக்கு கிடைத்த முதல் வெற்றியுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பமளியுங்கள்: ஐ.நா.விடம் புலிகள் வேண்டுகோள்!

தங்கள் இயக்கம்  மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பமளியுங்கள் என்று  ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம்  தம் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தமது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த ஐ.நா சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பிரஸ்தாப அறிக்கையின் முழு வடிவம் கீழ்வருமாறு:

தலைமைச் செயலகம், 

தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

16.05. 2011.        

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011

அன்பான தமிழ் மக்களே,

மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றிஇ உண்ண உணவின்றிஇ மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள்இ எறிகணைத்தாக்குதல்கள்இ  பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள்இ போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள்இ இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.

பன்னாட்டுத் தொண்டு  நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள்இ மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத்  தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.

போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல்இ பக்கச்சார்பானவையென்றும்இ உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும்இ மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு  நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை  போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பிற்குரிய தமிழக மக்களே ,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம்  தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.

எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட  எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ்  உறவுகளே,தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில்இ இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோஇ அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

 நன்றி.

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,ஊடகப்பிரிவு,தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.

என்பதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியில் கறுப்பு நிறமாக மாறிய கடல் நீர்! காரணம் ஜப்பான் அணுக் கழிவுகளா?

காலியின் களுவெல்ல பிரதேசத்தில் கடல் நீர் கறுப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடல் நீரின் நிறமாற்றத்திற்கு காரணம், ஜப்பான் அணுக்கழிவுகள் கடலில் கொட்டப்பட்டதன் தாக்கமாக இருக்கலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 

கறுப்பு நிறமான கடல் நீருடன் எண்ணெய்த் தன்மையான ஒரு வகைப் படிவும் நீரில் அடித்து வரப்பட்டு கரையொதுங்கும் காரணத்தால் களுவெல்ல பிரதேசக் கடற்கரையோரம் மாசடைந்து காணப்படுகின்றது. 

சமுத்திரவியல் மாசுகட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கடல் நீரின் கறுமைக்கும் அதனோடு சோ்ந்து கரையொதுங்கும் கழிவுகளுக்கும் எண்ணெய் அல்லது ஏதாவது இரசாயனம் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். 

காலி, களுவெல்லை பிரதேசத்தின் கடற்பரப்பில் சுமார் ஒரு ஏக்கர் வரையான பரப்பளவில் நீரானது கறுப்பு நிறமாக மாற்றமடைந்து மாசடைந்து காணப்படுகிறது.

ஞாயிறு, 15 மே, 2011

நியூயோர்க்கில் பான் கீ மூன் - அமைச்சர் விமல் வீரவங்ச சந்திப்பு


நியூயோர்க்கின் ஐ.நா. அலுவலகத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் விமல் வீரவங்ச ஆகியோர் சந்தித்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்தபெருமான் பரிநிர்வாணமடைந்து 2600 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களை உலகெங்கும் நடாத்த ஐ.நா. சபையும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் பிரதான வைபவம் தாய்லாந்தில் நடைபெறுவதுடன் அதற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பிரதமர் டீ.எம். ஜயரத்தினவுக்குக் கிடைத்துள்ளது.
இதற்கிடையே நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களின் பிரதம சொற்பொழிவாளராக அமைச்சர் விமல் வீரவங்ச அழைக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரஸ்தாப வைபவத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கலந்து கொள்ளவுள்ளதாக  ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான மூர்த்தி கொடிதுவக்கு என்பவரின் பெலியத்தையிலுள்ள  வீட்டின் மீதே இன்று அதிகாலை வேளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பெலியத்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆயினும் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக சேதமடைந்துள்ளன.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிங்களவர்களைப் போன்றே தமிழர்களுக்கும் நாட்டுப்பற்று முக்கியம்: மனோ கணேசன்


சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களுக்கும் நாட்டுப்பற்று இருக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளிவந்திருக்கும் ஞாயிறு வாராந்த திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களைப் போன்று இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கையானது எங்கள் நாடு என்ற எண்ணம் தலைதூக்கியிருக்க வேண்டும். அதாவது பிறந்த நாட்டின் மீது தாய்நாட்டுப் பற்று அனைவருக்கும் அவசியமானது.
அதே போன்று எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை வெளியாரைக் கொண்டு தீர்த்துவிட முடியாது. அதற்குப் பதிலாக நாங்களே எங்களுக்குள்ளான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இணக்கப்பாட்டுக்கான வழியாக இருக்கும்.
நம் நாட்டின் தலைவர்களை சர்வதேசத்திடம் ஒப்படைத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. நம் நாட்டின் தலைவர்கள் நம்முடன் இருந்தாக வேண்டும்.நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் நம்முடன் இருந்தால் மட்டும் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், நாட்டை அபிவிருத்தி செய்து கொள்வதற்குமான சூழல் ஏற்படும்.
இலங்கையராகிய நாம் எமது பிரச்சினைகளை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதே நாம் செய்த தவறாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு இணக்கம்


இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த தகவலை லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தரப்புக்களை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.நா.நிபுணர் குழுவின்  அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன, ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனை சந்தித்துள்ளார்.
இதன்போது இந்த அறிக்கையில் சுட்டிக்;காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்ததாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது.
அதனை தவிர இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக இந்தக்குழு கண்டறிந்தால் அது தொடாபிலான விசாரணைகளையும் முன்னெடுக்கும் என்றும பாலித கோஹனவும் பான் கீ மூனும் இணங்கியுள்ளனர்.
அதேநேரம் நிபுணர் குழுவின் அறிக்கையில் வேறு பல விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம்;, சிங்கள மக்களுக்கு ஒன்றையும் சர்வதேசத்துக்கு ஒன்றையும் கூறிவருவதாக ஜே வி பி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்த்க்கது

சனி, 14 மே, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்! பொங்கித் தீர்த்த வைகோ


சிங்கள இராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற அங்கயற்​கண்ணியை மீட்டதற்காக, உயர்நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது.வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ``பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...`` என விவரித்தார்.
அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி...
எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!`` என்று நெகிழ்ந்தார்.
இறுதியாக மைக் பிடித்தார் வைகோ.
எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன்.
வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். `சிங்கள இராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும்.
இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், `மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.
இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.
25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.
ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...`` என்று சீறினார் வைகோ!

ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை - திடீர் தொடர் 5


ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு​விட்டு சரணடைய வேண்டும்’ என்பதை சிங்கள இராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப்போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்​களைக் கொடூரமாகத் திட்டமிட்டுக் கொன்ற இராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது.
இந்தக் கொடு​மைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை இராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர்.
தஞ்சமடைய வெவ்வேறு இடங்களுக்கு ஓடியதால், பல குடும்பங்கள் திசைக்கு திசை சிதறிவிட்டன. குழந்தைகள் தனியாக... தாய் தனியாக... தந்தை தனியாக... வெவ்வேறு முகாம்களில் அவலத்துடன் தங்கினர்.
உதவிய கருணா...
உதறலில் மக்கள்!
நம்பி வந்த மக்களை வட்டுவாகல் பாலம் அருகே நிறுத்திய சிங்கள இராணுவம், 'அவர்களில் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கக்கூடும்’ என அஞ்சியது.
வெடிகுண்டுகள் இருக்குமோ... துப்பாக்கிகள் இருக்குமோ’ என்ற பயத்தால், மக்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து சோதனை செய்தனர். உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தது இராணுவம். இதனால், கேமரா, லேப்-டாப் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட போர்க் காட்சிகள், கொடூரச் செயல்கள் போன்ற ஆவணங்கள் எல்லாம் சுவடற்றுப்போய் விட்டன!


பின்னர், அவர்களை அங்கிருந்து கால்நடையாகவே கிளிநொச்சி, புல்மோட்டை, பதவியா பகுதிகளுக்கு இழுத்து வந்தனர். வழி எல்லாம் முளைத்து இருந்தன பல சோதனைச் சாவடிகள். அவற்றில் நடந்ததோ... ஈரமற்ற சோதனைகள்!  புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துளைத்து எடுத்தனர். கேவலமான இந்த சோதனைகளில் பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை.
அத்துடன் சிங்கள இராணுவத்துக்குத் துணையாக வந்திருந்தது, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் அமைப்பு. புலிகள் அமைப்பினரை மட்டும் அல்லாமல், அவர்களின் ஆதரவாளர்களையும் அந்த அமைப்பு காட்டிக் கொடுத்தது.
புலிகள் அமைப்பில் கட்டாயமாக சேர்க்கப்​பட்டவர்கள், குறுகிய காலம் மட்டுமே இருந்தவர்கள், ஒரு சில உதவிகளை மட்டும் செய்தவர்களைக்கூட கருணா அமைப்பு காட்டிக்கொடுத்தது. அப்படிப் பிடிபட்டவர்கள் விசாரணைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டு... பலர் கொல்லப்பட்டனர். கூடுதல் விசாரணை என்ற பெயரில் போனவர்களும், திரும்பி வரவே இல்லை.
இந்த சோதனைகளுக்குப் பிறகு, துயரப்பட்டு நகர்ந்த மக்கள் கூட்டத்தை ஓமந்தை என்ற இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அடுத்த கட்ட நரகப் பரிசோதனை... வந்தவர்களின் ஆடைகளை எல்லாம் இராணுவம் அவிழ்க்கச் சொல்லியது.
பெண்கள், சிறுமிகளின் உடைகளையும் கட்டாயப்படுத்தி அவிழ்த்து சோதனை இட்டனர். தலை குனிந்து கூனிக் குறுகிய அந்த ஈழப் பெண்களைப் பார்த்து கொக்கரித்தனர் சிங்கள வீரர்கள். கூடவே அவர்களின் பரிகாசமும், அட்டகாசச் சிரிப்பும் அந்த இடத்தையே நிறைக்க... கதறித் துடித்தனர் ஆதரவற்ற பெண்கள்!
மருத்துவமனைகள் சிங்கள இராணுவத்தின் கட்டுப்​பாட்டுக்கு வந்ததும், சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள். இராணுவ வீரர்களும், சி.ஐ.டி. பிரிவும் மாறி மாறி அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க, அப்பாவி மக்கள் நொந்து போய்விட்டனர்.
பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பினர் (டி.ஐ.டி) தனியாக விசாரணை நடத்தினர். இந்த வேதனையை சகிக்க முடியாத நோயாளிகள் பலர், 'சிகிச்சை இல்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை’ என்ற முடிவெடுத்து மருத்துவமனையைவிட்டு வெளியேறினர்.
மரண தண்டனை!
இராணுவத்தால் பிடிக்கப்பட்ட புலிகள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன.
பிரிட்டனின் சேனல்-4, சில வீடியோ காட்சிகளை வெளி​யிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அப்பாவிகள் தரையில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒட்டுத் துணியும் அவர்களிடம் இல்லை. அவர்களின் முகத்தை தரையை நோக்கி குனியும்படி சிங்கள இராணுவத்தினரிடம் இருந்து கட்டளை வருகிறது. அதைத் தொடர்ந்து, பின்னால் இருந்தபடி சிங்கள வீரர்கள் சரமாரியாக சுடுகிறார்கள். துடிதுடிக்கும் உடல்கள் ஓய்ந்து அடங்குகின்றன. அதே இடத்தில், ஏற்கெனவே கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய உடல்களும் காட்சிகளில் தெரிகின்றன.
அதே சேனலில் மீண்டும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அதில், தலையில் சுடப்பட்டு சிதறிக் கிடக்கும் ஆண்கள், பெண்களின் நிர்வாண உடல்கள் சிதறிக்கிடந்தன. அதில் ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் அலங்கோலமாகக் கிடக்க... அந்தப் பெண், புலிகளின் மீடியா அமைப்பில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இசைப்பிரியா!
கொல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்ரவதைக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த உடல்களே சாட்சியம் அளிக்கின்றன.
இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மை பற்றி முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அவை உண்மை​யானவை என்பது தெளிவானது.
அத்துமீறல்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. சிங்கள இராணுவ வீரர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்த அபலைப் பெண்களின் நிலைமையோ துன்பக் கேணிதான்!
- துயரங்கள் தொடரும்...

முற்றுகிறது கருணா - பிள்ளையான் மோதல்! நேற்றும் ஒருவர் பலி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானின் ஆதரவாளர் ஒருவரே நேற்று இரவு மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

புலம்பெயர் தமிழ் மக்களின் குடாநாட்டுச் சொத்துக்களில் கண் வைத்திருக்கும் இராணுவம்!

வெளிநாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் அசையாச் சொத்துக்களுக்கு சட்டபூர்வமற்ற உரிமையை பலர் கோரி வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதனை சீர் செய்யும் வகையில் வெளிநாட்டில் உள்ளோர் தங்களின் உடைமைகளுக்கு உரிய பொறுப்பாளர்களை சட்ட ரீதியாக ஒழுங்கமைத்துக்கொள்ளுமாறு நான் இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

"சட்ட ரீதியான பொறுப்பாளர்களிடம் குடா நாட்டு காணிகள் ஒப்படைக்கப்படுவதையே அங்குள்ள இராணுவத்தினரும் விரும்புகின்றனர்" என யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எனவே குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த 430, 000 பேரின் சொத்துக்கள் தொடர்பான சட்டரீதியான ஆவணங்களை அவர்கள் மீளவும் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக உறுதிபடுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

எனவே வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குடா நாட்டிற்கு வந்து தமது அசையா சொத்துக்களை பார்வையிட்டு உரிய பொறுப்பாளரிடம் சட்ட ரீதியாக ஒழுங்கமைத்து கொள்ளுமாறு இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார். 

தமிழ் மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்டமைப்புக்கள் இருக்கின்றன.. 

அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதை விடுத்து இராணுவத்தின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இணங்க செயற்படுவதானது குடாநாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சியா இடம்பெறுகின்றது என்ற சந்தேகத்தை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே மீண்டும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது....

போர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்!


கொழும்பு: இறுதிப் போரில் இலங்கையில் நிகழ்ந்த போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர் குழுவை கலைக்க நேற்று உத்தரவிட்டார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித இனமே பார்த்திராக கொடூரங்கள் அரங்கேறின, இந்த போரில். இந்த தமிழ் இன அழிப்பைஉலகமே வேடிக்கைப் பார்த்தது.

இந்த நிலையில் போர் முடிந்ததும், வன்னிப் பகுதியில் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஐ.நா.பொதுச்செயலரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை இலங்கை ஏற்கவில்லை. அத்துடன் நில்லாது அறிக்கையைக் கண்டித்து இலங்கையில் மே 1-ம் தேதி பேரணியும் நடத்தியது இலங்கை அரசு.

இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்று பெற்றுவிட்டதால் அக் குழுவினை கலைப்பதாக நேற்று அறிவித்தார் பான் கி மூன்.

இந்த விசாரணையின் போது இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்கள் அளித்தவர் பற்றிய விவரங்களை இருபது வருடங்களுக்கு வெளியிடக்கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பான் கி மூன்.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குத் தொடர புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சி


அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குகளைத் தொடர்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிரான வழக்குகளைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போதைக்கு மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் அவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் பிரஸ்தாப அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் சிலரும், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ள அதே வேளை, ஆரம்ப கட்டமாக இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளில் தற்போதைக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெள்ளி, 13 மே, 2011

விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவும், நோர்வேயில் அரசியல் தஞ்சம் பெறுகிவதற்கும் நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சுமார் 12 புலிகளுக்கு அவ்வாறு இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல நோர்வே தூதரக அதிகாரிகள் ஒத்தாசையாக இருந்துள்ளனர். . விமானப் பயணத்துக்கான டிக்கட் கொள்வனவு, விமான நிலையம் வரை தூதரக வாகனங்களில் கொண்டு செல்லுதல், விசா வழங்குதல் போன்ற ஒத்தாசைகளை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.

இவ்விடயம் இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய விபரீதமான செயல்பாடு என்று நோர்வே எதிர்க் கட்சிகள் அரசாங்கத்துக்கெதிராக கொதித்தெழுந்துள்ளனர்.

ஆனாலும் பிரஸ்தாப விடயத்தில் எதுவித தவறும் இருப்பதாக தான் கருதவில்லை என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் அச்செயற்பாட்டை நியாயப்படுத்துகின்றார்

" ஆபத்தில் இருக்கின்ற மக்கள் கூட்டத்தினருக்கு நோர்வே நீண்ட காலமாக உதவி செய்து வருகின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இரு வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்த பிற்பாடுகூட புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் வழக்கு விசாரணை எதுவும் இன்றி மிக நீண்ட காலமாக தடுப்புக் காவலிலும், பாதாள சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அல்லது காணாமல் போய் இருக்கின்றார்கள்.

எனவே நாம் சில வேளைகளில் வரம்பு மீறி செயல்பட வேண்டி இருக்கின்றது, சமாதான முன்னெடுப்புக்களுக்கு அனுசரணையாளராக செயல்பட்டு வந்திருக்கின்றபடியால் மனிதாபிமான கடப்பாடு எமக்கு உண்டு.

ஒரு மக்கள் கூட்டத்தினரால் இன்னொரு மக்கள் கூட்டத்தினர் பல வழிகளிலும் அடக்கி ஆளப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் திட்டமிட்ட வகையில் தீர்த்துக் கட்டல்கள் இடம்பெற்று இருக்கின்றன என்பதை பொறுப்போடு சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் மதுபானசாலை உரிமையாளா் மீது துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கை


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட எருவில் எனும் இடத்தில் மதுபானசாலை உரிமையாளர் ஒருவர் மீது சற்று நேரத்திற்கு முன்னர் இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தில் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இளங்குமரனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




புதுக்குடியிருப்பில் உள்ள தனது மதுபானசாலைக்கு சென்று விட்டு வீடு வந்து தனது வாகனத்தை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியபோது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.




இவர் மீது மூன்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேக நபர்கள் ரி.56 துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவத்தினைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பிரதேசம் எங்கும் படையினரும் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடியின் ஒவ்வொரு வீதியிலும் படையினர் குவிக்கப்பட்டு: தீவிர தேடுதல்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் வீதிகளில் போகும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 மே, 2011

புலிகளுடனான இறுதி போரின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்தை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்தது: விக்கிலீக்ஸ்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் தட்டிக்கழித்திருப்பதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை தற்காலிகமாகவேனும் இடைநிறுத்துவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சிலிருந்து பிரஸ்தாப விடயங்கள் கசிந்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அவற்றில் சில முக்கியமான விடயங்கள் கீழே தரப்படுகின்றன.

அரசாங்கப் படைகள் மூர்க்கத்தனமான முறையில் போரைத் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியாக நேரிடும் எனவும், அது சர்வதேச கண்டனங்கள் மற்றும் சர்வதேச யுத்த விதிகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் வழிவகுக்குமென அன்றைய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது 2009 மார்ச் மாதம் எச்சரித்துள்ளார்.

அதேவேளை போரில் விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதிசெய்யப்பட்டு விட்டதாகவும் அழிவு ஏற்படுவதற்கு முன்னர் சரணடையுமாறு விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரேயொரு மேற்குலக நாடான நோர்வே இராஜதந்திரிகள் விடுதலைப்புலிகளிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் அதற்குச் செவிசாய்க்கவில்லை.

குருதி சிந்தப்படுவதைத் தடுப்பதற்கு நாங்கள் முழுமூச்சாகச் செயற்பட்டோம். எங்களால் முடிந்ததைச் செய்ததாக நாம் உணர்கின்றோம். எனினும் அவற்றையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பார்க்கும்போது விரக்தியாக இருந்தது என்று இலங்கைக்கான அன்றைய நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் தெரிவித்துள்ளார்.

2009 மே மாதம் போர் வலயத்திற்குள் பொதுமக்கள் எவருமே இல்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. அந்தக் கூற்று உண்மையல்ல என்பதையும் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் உயிராபத்திற்குள் சிக்கியிருப்பதையும் எடுத்துரைக்கும் பல்வேறு அறிக்கைகள் அமெரிக்கக் தூதுவருக்குக் கிடைத்துள்ளன. அதனையடுத்து அழிவுகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிளேக் தொடர்பு கொண்டுள்ளார்.

காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை வெளியில் எடுத்து வருவதற்கான அனுமதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழங்குமாறு ரொபேர்ட் பிளேக் கோரிக்கை விடுத்த போதும் அவ்வாறு செய்ய முடியாது என பசில் ராஜபக்ஸ கடுந்தொனியில் பிளேக்கிடம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதே போன்று விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு தயாராக இருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அப்பகுதிக்கு ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு கோத்தாபய ராஜபக்ஸவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது அதற்கான நேரம் தாண்டிவிட்டதாக அவர் பதிலளித்துள்ளார்.

அழிவைத் தடுப்பது தொடர்பாக கொழும்பிலிருந்த இராஜதந்திரிகள் கொண்டிருந்த கருத்தினையே உலகெங்கும் பலரும் கொண்டிருந்தனர். இவர்களில் நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர் ஜான் எக்லண்டும் ஒருவராவார்.

மேற்கண்டவாறாக இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி மாதங்களின் நிகழ்வுகளை திகதி வாரியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலை நோர்வேயின் aftenposten ஊடகம் விலாவரியாக தொகுத்து வெளியிட்டுள்ளது.

நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அளிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் திருப்பமாகக் கருதப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும்.

இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். நிபுணர் குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான விதந்துரைகளை இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைப் பொறுப்பாளர் கெதரீன் எஸ்டோன் தெரிவித்துள்ளார்

பான் கீ மூனைக் கொல்வதற்கு இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில்: அமைச்சர் மோ்வின் சில்வா


பான் கீ மூன் அல்லது வேறு யாரேனும் சர்வதேச சக்திகள் இலங்கையில் தலையிட முயன்றால் அவர்களைக் கொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக் குண்டுதாரிகள் களனியில் தயாராக இருப்பதாக அமைச்சர் மோ்வின் சில்வா எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இரத்தக் கையொப்பங்களைச் சேகரிக்கும் நிகழ்வொன்றை இன்று கண்டியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மோ்வின் சில்வா மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட முற்படாதீர்கள். அவ்வாறு தலையிட முற்பட்டால் அது எந்த சர்வதேச விசாரணைக்குழுவாக இருந்தாலும் அவர்களைப் படுகொலை செய்ய இருபத்தி ஐந்து தற்கொலைக்குண்டுதாரிகள் தற்போதைக்குக் களனியில் தயாராக இருக்கின்றனர்.

நிபுணர்குழுவின் தலைவர் தருஸ்மான் தாயொருவரின் வயிற்றில் இருந்து பிறந்தவராக இருக்க முடியாது. அவர் நிச்சயமாக விலங்கொன்றின் வயிற்றில் இருந்து பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மோ்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்