விண்வெளி ஆய்வுக்காக சென்ற ஷென்ஷோ-9 என்ற விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்த விண்கலத்தில் முதன் முறையாக பெண் விமானி லியு யாங்(வயது 33) உட்பட, ஜிங் ஹைபெங்(வயது 45) மற்றும் லியூ வாங்(வயது 43) ஆகியோர் பயணம் செய்தனர்.
கடந்த 19ஆம் திகதி இந்த விண்கலம் பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
அங்கு அவர்கள் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். ஆய்வுப்பணி முடிந்ததையடுத்து இன்று மாலை அல்லது இரவு இந்த விண்கலம் வெற்றிகரமாக பூமி திரும்புகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விண்வெளி அதிகாரிகள் செய்து வருகி்ன்றனர்.
0 comments:
கருத்துரையிடுக