கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

சிறப்புச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்புச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜூலை, 2012

நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?

இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின் வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

நியூசிலாந்தில் ரயிலை வாங்குவதற்கு விண்ணப்பித்த 4 வயது சிறுவனால் பரபரப்பு

நியூசிலாந்தில் ரயில் ஒன்றை வாங்குவதற்கு, நான்கு வயது சிறுவன் ஒருவன் இணையத்தளம் மூலமாக விண்ணப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெலிங்டன் மாகாண சபையின் போக்குவரத்து பிரிவான மெட்லிங் நிறுவனம் பழைய ரயில்

வெள்ளி, 11 நவம்பர், 2011

உயிருள்ள கணவாயை உண்ணும் மனிதர்கள்

ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பிடும் வித்திர மனிதர்களை பார்த்ததுண்டா…? கொரியா நாட்டில் உயிர் உள்ள கணவாய்களை (Octopus) அப்படியே உண்ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள். 

ஞாயிறு, 17 ஜூலை, 2011

110 ஆண்டுகளாக எரியும் அதிசய மின்விளக்கு..!!

பொதுவாக நமது வீடுகளிலும் மின் விளக்குகளை பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் அதிகமாக இரவுகளில் மட்டுமே பயன்படுத்து வது வழக்கம். அந்த இரவு நேரங்களிலும் சில மணி நேரங்களே பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. இந்த பழைமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம். இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார்.

புதன், 25 மே, 2011

நாய் குட்டியை ஈன்ற ஆட்டுக்குட்டி: சீனாவில் விசித்திரம்!

நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு விசித்திரங்கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில்சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது.

வெள்ளி, 20 மே, 2011

300 கம்பிகளை முகத்தில் குத்தியிருக்கும் மனிதன்(படங்கள் இணைப்பு)

300 கம்பிகளை முகத்தில் குத்தியிருக்கும் மனிதன் படங்கள் இணைப்பு

ஒரு வருடகாலம் ஆண்வேடமிட்டு ‘கணவனாக’ வாழ்ந்த யுவதி


இந்தியப் பெண்ணொருவர் தன்னுடன் ஒருவருட காலம் கணவனாக குடும்பம் நடத்திய நபர்  உண்மையில் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஓரிஷா மாநிலத்தின் ரூர்கேலா நகரைச் சேர்ந்த மீனாட்சி கஹதுவா எனும் 26 வயது  பெண்ணுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்  குறிப்பிடுகையில் தானும்  தனது குடும்ப அங்கத்தவர்கள்  அனைவரும்  சீதாகாந்த் ரோத்ராய் (வயது 28) என்பவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.

மனைவியை தவிர்த்துவிட்டு செக்ஸ் பொம்மைகளுடன் உல்லாசப் பயணம்


கனடாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, ஆளுயர செக்ஸ் பொம்மைகளுடன் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உல்லாசப் பயணம்  மேற்கொண்டு வருகிறார்.

பரபரப்பாக விற்பனையாகும் எதுவும் எழுதப்படாத ‘செக்ஸ் புத்தகம்’


200 பக்கங்களைக் கொண்ட செக்ஸ் புத்தகமொன்று பிரிட்டனில் பரபரப்பாக விற்பனையாகி அதிகம் விற்பனையான புத்தகமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த புத்தகத்தில் எதுவுமே எழுதப்படவில்லை அனைத்து பக்கங்களும் வெறுமையாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய குள்ள மனிதர்-17 வயது ஆனால் உயரம் 22 அங்குலம்

இவர் பெயர் ஜன்ரி பாலாவிங் வயது 17 ஆனால் உயரம் 22 அங்குலங்கள் மட்டுமே. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் தான் விரைவில் உலகின் குள்ளமான மனிதர் என்ற புகழைப் பெறவுள்ளார்.ஜுன் மாதம் 12ம் திகதி இவர் 18 வயதை அடையும் போது இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்கும்.

தற்போதைய பதிவுகளின் படி உலகின் குள்ளமான மனிதரை விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரத்தை அப்போது கொண்டிருப்பார்.தனது முதலாவது பிறந்த நாளைக்குப் பின் இவரின் உடல் உயரம் வளரவே இல்லை என்று கூறப்படுகின்றது.

வியாழன், 19 மே, 2011

உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

Add caption
நாம் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிங்களா படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது. இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும். சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

செவ்வாய், 17 மே, 2011

19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள்(படங்கள் இணைப்பு)

19 வயது பெண் தனது உணவாக சவர்க்காரம் உட்கொள்கிறாள் இந்த பெண் தன்னுடையா முன்று நேர உணவாக சவர்காரத்தை உட்கொள்கிறாள் இந்த பெண் சில வேளைகளில் சலவை துளையும் உட்கொள்கிறாள்

தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார்(படங்கள் இணைப்பு)

தண்ணீரிலும் தரையிலும் ஓட கூடிய கார் இது மனிதனின் ஓர் அருமையான கண்டுபிடிப்பு இந்த காரின் விலை $200,000 ஆகும் இந்த கார் வெற்றிகரமாக பரிசோதனை பண்ணி முடிக்கப்பட்டுள்ளது கார்

உயிரோடு இருக்க ஒவ்வொரு 15 நிமிடமும் உண்ண வேண்டும்- வினோத பெண்

லிசி வயது 21 எடை 25 Kg மட்டுமே.ஒரு நாளைக்கு 60 தடவை சாப்பிடுகிறார்,இருப்பினும் அவர் எடை கூடவில்லை.
அவர் உடலில் ௦% கொழுப்பு உள்ளது.
மரபியல் மருத்துவர்கள் இவரை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள் .

அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், “டிவி’  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000  பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும், அதிக உடல் பருமனுடனும் இருப்பர்.  அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, “டிவி’ பார்ப்பதால், இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக “டிவி’ பார்ப்பது தான் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பாதுகாப்பானது.  பெரும்பாலான பெற்றோர், தங்களது குழந்தைகள், “டிவி’யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து,  சத்துக் குறைவான  உருளைக்கிழங்கு சிப்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
“டிவி’ நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும், நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள், தங்களது பெற்றோருடன் அமர்ந்து, “டிவி’ பார்ப்பதையே விரும்புகின்றனர். “ரியாலிட்டி ÷ஷா’க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர்.  பெரும்பாலான, “டிவி’ நிகழ்ச்சிகளில் வன்முறை, ஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, “டிவி’ நிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜாக்கி சானை விற்க நினைத்த பெற்றோர்!

உலகப் புகழ்பெற்ற கராத்தே வீரரான புரூஸ் லீக்கு இணையாகப் பேசப்படுபவர் `ஜாக்கி சான்’. நடிகர், நகைச்சுவைக் கலைஞர், தற்காப்புக் கலைஞர், சண்டைக் கலைஞர், சண்டைக் காட்சி அமைப்பாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், தொழிலதிபர் என்று ஜொலிப்பவர் இவர். ஜாக்கி சான், 7.4.1954 அன்று ஆங்காங்கில் பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். குழந்தையை வளர்க்கக் கூட வசதியில்லாத ஜாக்கியின் பெற்றோர், நீண்ட யோசனைக்குப் பின் குழந்தையை விற்பதற்கு முடிவெடுத்தனர். குழந்தையை வாங்குவதற்கு ஓர் ஆங்கில டாக்டரும் முன்வந்தார். ஆனால் ஜாக்கி சானின் தந்தையிடம் அவரது நண்பர் ஒருவர், `உங்கள் இருவருக்குமே தற்போது 40 வயதாகிறது. எனவே உங்களுக்கு இதுவே கடைசிக் குழந்தையாக இருக்கலாம். எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தையை விற்க வேண்டாம்’ என்று அறிவுரை கூறினார். அதன்பின், குழந்தையை விற்கும் முடிவிலிருந்து ஜாக்கியின் தந்தை மாறிவிட்டார். ஒருவேளை ஜாக்கி சானை விற்றிருந்தால்…? அவர் நன்கு கல்வி கற்ற மனிதராக, ஆனால் யாருக்கும் தெரியாதவராக எங்கோ ஒரு மூலையில் முடங்கியிருப்பார். ஆனால் அதிகம் படிக்காத ஜாக்கி சான்தான் உலகப் புகழ் பெற்ற நடிகராகவும், மனிதநேயமிக்க மனிதராகவும் திகழ்கிறார்.

திங்கள், 16 மே, 2011

வேற்றுக்கிரக வாசிகள் உண்மையா பொய்யா..? சூடுபிடிக்கும் விவாதங்கள்!

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது. இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள், ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.
இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள், பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர். கடந்த 10 வருடங்களில், சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம், வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில் இருப்பது போல் வளிமண்டலம், புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118 ,000, 000,000,000 மைல்கள் அளவிற்கு தூரமும், மேலும் இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர். இதனையடுத்து வேற்று கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.
இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால் உருவானவை இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ.வில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டி.என்.ஏ.வி்ல் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது .ஆர்சனிக்-பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ‘உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது.

கால்களால் பஞ்சர் போடும் சீனமனிதன்..!- படங்கள் இணைப்பு!


இரு கைகளையும் வைத்துக்கொண்டே நாம் வேலைக்கு சென்று சம்பாதிக்க எவ்வளவு பாடுபடவேண்டியிருக்கிறது. ஆனால் சீனாவில் ஒரு நபர் ஒரு கை முழுமையாக இல்லாமலும் ஒரு கை ஊனமாக இருக்கின்ற போதிலும் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்கின்ற வைராக்கியத்தோடு கால்களால் உழைப்பு நடாத்தி வருகிறார். அதுவும் ஒரு கடினமான தொழில். சைக்களில் ரயர்களுக்கு பஞ்சர் போடும் தொழிலையே இவர் செய்கிறார். கைகளால் பஞ்சர் போடுவது என்பதே சற்று கடினமான விடயம்தான் இவரோ தனது இரு கால்களாலும் தன்னிடம் வரும் வாடிக்கையார்களின் சைக்கிள்களுக்கு பஞ்சர் போட்டு கொடுக்கிறார். இவரின் திறமையை என்னவென்று சொல்லி மெச்சுவது?






தலையணையை திருமணம் செய்த வினோத மனிதன்!(படஇணைப்பு)

உண்மையாக காதலிப்பவர்கள் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது இந்தச்சம்பவம். புதியஉலகம் தரும் வித்தியாசமாக செய்திகளுள் இதுவும் ஒன்று. ஒரு மனிதன் விலங்குகளை திருமணம் செய்யும் வித்தியாசமாக முயற்சிகளில் தொடங்கி ரோபோ வை திருமணம் செய்வது வரைக்கும் வந்து நின்ற மனிதனின் காதல் உணர்வு இப்போது இன்னும் வித்தியாசமான முறைக்கு மாறியுள்ளது. உயிரே இல்லாத ஒரு தலையணையை ஒருவர் திருமணம் செய்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். கொரியாவைச்சேர்ந்த ஒரு இளைஞன் தனது தலையணை மீதான அதீதகாதலால் அதையே திருமணம் செய்துள்ளார்

ஞாயிறு, 15 மே, 2011

காதலன் பாணியிலேயே கொடூரமாக தாக்கிய காதலி

ஒரு தலைப்பட்சமாகக் காதலித்த தனது காதலியின் முகத்தில் அசிட் ஊற்றி அவரின் தோற்றத்தை விகாரமாக்கி ஒரு கண்ணையும் குருடாக்கியுள்ளான்.
இதற்கு பழிவாங்கும் விதமாக அவனது முகத்திலும் அசிட் ஊற்ற நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிமை வழங்கியுள்ளது.
ஈரானிய நீதிமன்றமே இந்தப் பழிக்குப் பழிவாங்கும் உரிமையை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 32 வயதான ஆமினா பஹ்ரமி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டவராவார்.
இவரும் இவரின் முகத்தில் அஸிட் ஊற்றிய அவரின் காதலரும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பயிலுபவர்கள். பழங்கால தீர்ப்பு முறைகள் ஈரானில் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றே பழிக்குப் பழி வாங்கும் உரிமையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குதல். அந்த முறையின் கீழேயே இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 27 வயதான மாஜித் மொஹவதி என்பவரே சல்பூரிக் அமிலத்தை இந்தப் பெண் மீது வீசியவர்.
அதனால் அழகிய தோற்றமுடைய அவரின் முகம் விகாரமாகிப் போனது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இந்தப் பெண்ணைப் பல தடவைகள் கெஞ்சியும் அவர் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்தே மாஜித் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார்.
ஆமினாவுக்கு 19 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவருக்கு கண் பார்வையோ அல்லது பழைய தோற்றமோ கிடைக்கவில்லை. 2004ல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ஆமினாவுக்கு 19000 பவுண்களை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு மாஜித்துக்கு சிறைத் தண்டனையும் வழங்கியது.
ஆனால் இந்த நஷ்ட ஈட்டை ஆமினா ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் தான் அனுபவித்து வரும் வேதனையை மாஜித்தும் அனுபவிக்க வேண்டும் என்று கூறி தனக்கு பழிவாங்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு மேன்முறையீடு செய்தார்.
பழிவாங்கத் துடிக்கும் ஆமினாவிடம் மாஜித்தின் தாயார் மன்றாடியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஆமினா தனது பிடிவாதத்தைக் கைவிடவில்லைஇப்போது மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் ஆமினாவுக்கு சார்பாகத் தீர்ப்பளித்துள்ளது. மாஜித் தற்போது நோய்வாய்ப்பட்டு டெஹ்ரான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று நண்பகல் அவரது இரு கண்களிலும் தலா 20 துளிகள் வீதம் அசிட்டைச் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்திலேனும் ஆமினா மனம் மாறினால் இந்தத் தண்டனை ரத்தாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆறு வருடங்களின் பின் தனக்கு இப்போதாவது நீதி கிடைத்துள்ளமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆமினா நேற்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் நாம் இருவருமே தோற்றுப் போனவர்கள் காரணம் இருவருமே அதிக துன்பங்களைச் சந்தித்து விட்டோம் என்றும் ஆமினா தெரிவித்துள்ளார்.
கடைசியாக இன்று வெளியாகியுள்ள தகவல்களின் படி சர்வதேச அழுத்தங்களினால் காதலனின் முகத்தில் அசிட் ஊற்றுவது பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.