இன்றைய நவீன மனிதனாவன் ஓமோசேபியன்ஸ் எனப்படும் ஆதிகால மனிதனின்
வழித்தோன்றல்களே எனவும் இது 200,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாகவும்
கூறப்படுகிறது.
ஆதி மனித பரம்பரை ஆபிரிக்காவிலேயே தோன்றியதாகவும் பின்னர் படிப்படியாக
மத்திய கிழக்கினூடாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடம்பெயர்ந்ததாகவும்
இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு வந்ததாகும்.
ஆனால் நேற்று மத்திய இஸ்ரேல் குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதிகால
மனிதனின் பற்கள் சுமார் 400,000 வருடங்கள் பழமையானவை என
நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை நவீன மனிதனின் பற்களுடன் பெரிதும் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப் பற்களை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் ஆகியவற்றிற்கு உட்படுத்தியதாகவும்
இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த டெல் அவிவ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சி தொடர்பான வரலாறானது மீள எழுதப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இதனை உறுதி செய்ய மேலும் பல ஆராய்ச்சிகள் அவசியம் எனஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசியர் அவிவ் கோபர் தெரிவித்துள்ளார்.
வியாழன், 19 ஜூலை, 2012
நவீன மனிதனின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு மீள எழுதப்படுமா?
Labels:
சிறப்புச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக