மனித மனத்தினை அறியும் கணனிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுதல் சாத்தியம் என ஐ.பி.எம் நிறுவனம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எம் IBM 5 in 5 என்ற தலைப்பின் கீழ் எதிர்வு கூறல்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்
எதிர்வுகூறல்கள் தொழில்நுட்பம் தொடர்பானவையே. அடுத்த ஐந்து வருடத்தில்
சாத்தியப்படும் 5 தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புகள்
தொடர்பிலேயே இவ்
எதிர்வுகூறல்களை ஐ.பி.எம் மேற்கொண்டு வருகின்றது.
அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் இத்தகைய எதிர்வு கூறல்களில் சில வெற்றிகரமாக அமைந்துள்ளதுடன் சில இதுவரை சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் இவ்வருடமும் 5 எதிர்வுகூறல்களை ஐ.பி.எம் மேற்கொண்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கவொன்றே மனத்தினை அறியும் கணனி.இது தொடர்பிலான விளக்கக் காணொளியொன்றினையும் ஐ.பி.எம். வெளியிட்டுள்ளது. இது தொடர்பிலான
ஆராய்ச்சிகள் கடந்த சில வருடங்களாகவே நடந்து வருவதுடன் அதில் ஓரளவுக்கு
வெற்றியும் கிட்டியுள்ளது. எனவே இது சாத்தியமுள்ள எதிர்வுகூறலாகக்
கருதமுடியும்.
மனிதன் இணையத்துடன் பேசமுடியும், இணையம் மனிதனுக்கு பதிலளிக்கும் என ஐ.பி.எம் முன்னரே எதிர்வு கூறியிருந்தது.
அது அப்பிள் 4S கையடக்கத்தொலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சைரி' என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஓரளவுக்கு சாத்தியமானமை நாம் அறிந்ததே.
எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!
ஐ.பி.எம். இன் மற்றைய எதிர்வு கூறல்கள்.
People power will come to life
வியாழன், 19 ஜூலை, 2012
மனதை அறியும் கணனிகள் சாத்தியப்படுமா?: ஐ.பி.எம் இன் எதிர்வுகூறல்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக