Elate Computer Systems நிலையத்தனரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட கணனி மென்பொருள் தொடர்பாக கேள்விப்பட்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு நிலையத்தின் இயக்குனர் ப.ஜோன்சன் மற்றும் நிலையத்தின் மென்பொருள் அபிவிருத்தியாளர் வி.ஜங்கரன் ஆகியோரை நேற்று 02-08-2012 அழைத்திருந்தார்.
இதன்போது புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்து கணனி உலகில் சாதனை புரிந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மென்பொருள் அபிவிருத்தியாளர் ஆகியோருக்கு தமது வாழ்த்துக்களையும்.பராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்டார்.
குறித்த மென் பொருள் தொடர்பாக ஆர்வமாக கேட்டறிந்த அமைச்சர் தனது கணனியிலும் நிறுவசொல்லி குறித்த மென்பொருள் தொடர்பில் தனது மகிழ்சியை நிர்வாகத்தினருக்கு தெரிவித்தார். இந்த சந்திப்பு 1மணிநேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. பின்னர் நிறுவன வளர்ச்சிகுறித்து கேட்டறிந்த அமைச்சர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 6 இலட்சம் ரூபாவை வழங்குவதாக கூறிய அமைச்சர் முதல்கட்டமாக மகேஸ்வரி நிதியத்தினுடாக 1 இலட்சம் ரூபாவை வழங்கி வைத்தார் இவர்கள் இருவரும் யாழ்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக