குழந்தை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது ஐவிஎப் (இன்விட்ரோ பெர்டிலைசேஷன்) எனப்படும் செயற்கை கருவூட்டல் மருத்துவ முறை.அதிகம் செலவானாலும் சிலருக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது. சிலர் பல முறை
முயற்சித்தும் தோல்வியே தொடர்கிறது.
அடுத்த முறையாவது வெற்றிகரமாக
முடியுமா? ‘உறுதியாக சொல்ல முடியாது. பார்க்கலாம்’ என்பார் டாக்டர். ஓரளவு
வசதியானவர்கள் தாக்குப் பிடிக்கலாம். நடுத்தர, ஏழை மக்களால் முடியுமா. இந்த
பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கின்றனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.
கிளாஸ்கோ மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்
பேராசிரியர் ஸ்காட் நெல்சன் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர். ஐவிஎப்
முறையில் குழந்தை பிறக்குமா என்பதை துல்லியமாக கண்டறியும் பார்முலா ஒன்றை
அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது பற்றி நெல்சன் கூறியதாவது: செயற்கை கருவூட்டல் முறையில் வெற்றி
கிடைக்குமா என்பதை கண்டறிய ஒரு பார்முலாவையும் ஒரு கருவியையும்
உருவாக்கியுள்ளோம். செல்போன், கால்குலேட்டர் போல இது
வடிவமைக்கப்பட்டுள்ளது. ivfpredict.com என்ற இணையதளத்தில் படிப்படியாக
தகவல்களை பூர்த்தி செய்தால் குழந்தை உருவாவதற்கான வெற்றி வாய்ப்பு
சதவீதத்தை தெரிந்துகொள்ளலாம். ஸ்மார்ட் போன்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள
முடியும்.
பெண்ணின் வயது, எத்தனை ஆண்டுகளாக முயற்சிக்கிறீர்கள், சொந்த கருமுட்டையா..
மற்றவரிடம் இருந்து பெற்றதா என்பது உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
பதிலை அடுத்தடுத்து கிளிக் செய்தால், செயற்கை கருவூட்டல் வெற்றி வாய்ப்பு
சதவீதம் வந்துவிடும். 2003 முதல் 2007 வரை சுமார் 1.44 லட்சம் பேரிடம்
கிடைத்த ரிசல்ட்டை வைத்து இந்த பார்முலா உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
ஸ்காட் நெல்சன் கூறியுள்ளார்.
வியாழன், 19 ஜூலை, 2012
வாரிசு வளருமா.. வளராதா? கம்ப்யூட்டர் கிளிக் சொல்லும்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக