கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கையடக்கத்தொலைபேசி சந்தையில் தனக்கென ஓரிடத்தினை வைத்திருந்தது நொக்கியா.
எனினும் பின்னாளில் சம்சுங் மற்றும் அப்பிளின் பலத்த போட்டிக்கு முகம் கொடுக்க முடியாமல் தன் இடத்தினை இழக்க நேர்ந்தது.
மைக்ரோசொப்டுடன் இணைந்து விண்டோஸ் கையடக்கத் தொலைபேசிகளை அண்மையில் நொக்கியா அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் நொக்கியா, டெப்லட் கணனியையும்
அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இத்தகவல்கள்
உறுதிப்படுத்தப்படாத போதிலும் நொக்கியா இதில் நுழைவதற்கான சாத்தியக்
கூறுகள் அதிகமாகவே காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
காரணம் டெப்லட்கள் நொக்கியாவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே டெப்லட்களை நொக்கியா ,2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி இருந்தது.
'நொக்கியா 770 இண்டர்நெட் டெப்லட்' மற்றும் 'நொக்கியா என் 800 இண்டர் நெட் டெப்லட்' ஆகியன நொக்கியாவின் தயாரிப்புகளாகும்.
அண்மையில், பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது பலத்தினை மீண்டும் நிரூபிப்பதற்காக
எனினும் அவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்பதனால் நொக்கியா அவற்றைக் கைவிட்டது.
தற்போது
நொக்கியா டெப்லட் உற்பத்தியில் மீண்டும் கவனம் செலுத்தத்
தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நொக்கியா தனது கையடக்கத்
தொலைபேசிகளுக்காக மைக்ரோசொப்டுடன் இணைந்துள்ளது போன்று, டெப்லட்களுக்கும் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அப்பிளின்
ஐபேட், செம்சுங்கின் கெலக்ஸி டெப் ஆகியன மக்கள் மத்தியில் பெற்றுள்ள
வரவேற்பானது நொக்கியா டெப்லட் கணனிச் சந்தையின் மீது கண்வைக்க மற்றுமொரு
காரணமாகக் கருதப்படுகின்றது.
எனினும் இதனைவிட நொக்கியா சரிந்துள்ள
தனது கையடக்கத் தொலைபேசி சந்தையை மீளக்கட்டியெழுப்புவதிலேயே அதிக
முக்கியத்துவம் செலுத்துமென கூறப்படுகின்றது.
எவ்வாறானும்,
நொக்கியாவும் டெப்லட் சந்தையில் நுழையுமானால் தற்போது சந்தையில்
முன்னணியில் உள்ள அப்பிளின் 'ஐ பேட்' உடன் கடுமையாக மோத வேண்டியிருக்கும்.
அதனோடு அண்ட்ரோயிட்டின் ஆதிக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசி, டெப்லட் என இரண்டு
துறைகளிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் நொக்கியாவுக்கு இது
ஒரு சவால் என்பது மட்டும் உறுதி.
வியாழன், 19 ஜூலை, 2012
டெப்லட் சந்தையில் நுழையும் அடுத்த ஜாம்பவான் : அப்பிளுடன் மோதவும் தயார்!
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக