யாஹூ இணையத்தளத்தின் முதன்மை செயல் அதிகாரியாக மரிஸா மேயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது நாள் வரையிலும் கூகுள் தேடுதளத்தின் துணைத் தலைவராக இருந்த அவர், இன்று முதல் யாஹூவின் சி.இ.ஒ வாக பணியை தொடங்குகிறார்.
1999ஆம் ஆண்டு கூகுளின் முதல் பெண் பொறியாளராக தனது பணியை தொடங்கிய
மரிஸா ஐ கூகுள், கூகுள் நியூஸ், ஜி மெயில் போன்றவற்றின் வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருந்தார்.
6000க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களை வழி நடத்தினார். 13 ஆண்டுகாலம்
கூகுளில் பணியாற்றியுள்ள மரிஸா அந்நிறுவனத்தில் துணைத் தலைவராக உயர்ந்தார்.
யாஹூவில் பணியாற்ற உள்ளது பற்றி கருத்து கூறியுள்ள மரிஸா, இது தனக்கு பெருமை தரக்கூடியது என்று தெரிவித்துள்ளார்.
700 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட யாஹூ நிறுவனத்தில் முதன்மை செயல்
அதிகாரியாக தன்னை நியமனம் செய்ததற்காக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன்
பணியாற்றுவேன் என்றும் மரிஸா கூறியுள்ளார்.
செவ்வாய், 17 ஜூலை, 2012
யாஹூவின் CEOவாக கூகுளின் துணைத் தலைவர் நியமனம்
Labels:
தொழிநுட்ப செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக