| தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கட் வீரர் சச்சின், மென்பந்தாட்ட வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் தனது பிறந்த நாளை 2010ம் ஆண்டு ஜமைக்கா நாட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது மூவர்ண கொடியின் நிறத்தினாலான கேக்கை வெட்டிக் கொண்டாடியது வலைதளத்தில் வெளியாகி உள்ளது. |
இந்திய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 25 மே, 2011
சச்சின், சானியா மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு
Labels:
இந்திய செய்திகள்
செவ்வாய், 24 மே, 2011
அழகிரியைக் காணவில்லை: தமிழகத்தைக் கலக்கும் போஸ்டர்!
மு.க.அழகிரிக்கு எதிராக தமிழகத்தை ஒரு போஸ்டர் கலக்கிக்கொண்டு இருக்கிறது.மதுரையில் வீடியோ கடை நடத்தியது முதல் மத்திய அமைச்சரானது வரை முஇதனாலயே இவரது ஆதரவாளர்கள் கட்சியிலும்,அதிகாரத்திலும் இடம் பிடிக்க பெரிதாக எதுவும் செய்ய மாட்டார்கள்.
Labels:
இந்திய செய்திகள்
வெள்ளி, 20 மே, 2011
மு.க.அழகிரியின் மண்டபம் மீது கல் வீச்சு தாக்குதல்: மதுரையில் பரபரப்பு
| தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா திருமண மண்டபம் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. |
Labels:
இந்திய செய்திகள்
வியாழன், 19 மே, 2011
கற்பழிக்க முயன்ற தந்தை!!!மகள் கத்தி குத்து
குடிபோதையில் தன்னைக் கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.
ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.
ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு புனித ஜோசப் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
Labels:
இந்திய செய்திகள்
புதன், 18 மே, 2011
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு சோனியாவைத் துரத்தி அடியுங்கள்!
''கதரா... கருகிய பதரா... என்கிற அளவுக்கு காங்கிரஸை அறைவேன். எங்களின் உரு அறுத்த காங்கிரஸைக் கருவறுப்பேன்!'' - திருப்பி அடித்த சீமானின் வெறிகொண்ட வேகம் காங்கிரஸ் தோற்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. 63 தொகுதிகளில், 5 தொகுதிகளில் மட்டுமே தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கரையேறி இருக்கிறது காங்கிரஸ்!!
இது தனிப்பட்ட சீமானுக்கோ, 'நாம் தமிழர்’ கட்சிக்கு மட்டுமோ, கிடைத்த வெற்றி அல்ல. தமிழர் என்கிற இனத்துக்கும், இன மானத்துக்கும் கிடைத்த வெற்றி.
Labels:
இந்திய செய்திகள்
செவ்வாய், 17 மே, 2011
உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!
சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.
மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.
விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.
விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.
கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை. இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!
Labels:
இந்திய செய்திகள்
தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை
கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.
இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது
Labels:
இந்திய செய்திகள்
திங்கள், 16 மே, 2011
ஜெயலலிதாவை சோனியா விருந்துக்கு அழைத்ததன் எதிரொலி- திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிறது?
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.
திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.
இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.
இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.
இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.
தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.
மேலும் 2014 ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மேலும் 2014 ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.
Labels:
இந்திய செய்திகள்
ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா சற்றுமுன், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டு சத்தியபிரமாணம் செய்து கொண்டார். அமைதியான , நிம்மதியான வாழ்வைத் தமிழக மக்களுக்கு இனி தான் தரப் போவதாக இனிப்புச் செய்தியையும் அவர் தெளிவாக தெரிவித்தார்.
பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை இன்று அமைக்கிறது.
அ.தி.மு.க. சட்டசபை தலைவராக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதாவை புதிய அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அழைப்பு விடுத்தார். முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பதை, தலைமைச் செயலர் மாலதி நேற்று ராஜ்பவனில் அதிகாரப்பூர்வமாக நிருபர்களிடம் வெளியிட்டார். சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, இன்று பகல், 12.15 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது.
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருடன், அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி, சரத்குமார், சேதுராமன் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்
அதேபோல், குஜராத் முதல்வர் மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர், பரதன், தேசிய செயலர், டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர், பிரகாஷ் கராத் மற்றும் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, அங்கு கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விவரம், கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும். கடந்த கால இருள் பாதையில் இருந்து விலகி, தமிழக மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு புதிய அரசு செயல்படும் என்ற மகிழ்ச்சிச் செய்திகள் இனி வெளிவரும் என்ற கருத்து உருவாகியுள்ளது.
அழைப்பு : முன்னதாக, புதிய அரசு அமைக்க, கவர்னர் விடுத்த அழைப்பை அடுத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, 11.45 மணிக்கு, கிண்டியில் உள்ள ராஜ்பவனிற்கு சென்றார். அங்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, ஜெயலலிதா கடிதம் அளித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது.
பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை இன்று அமைக்கிறது.
அ.தி.மு.க. சட்டசபை தலைவராக, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா ஏகமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதாவை புதிய அமைச்சரவை அமைக்குமாறு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அழைப்பு விடுத்தார். முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பதை, தலைமைச் செயலர் மாலதி நேற்று ராஜ்பவனில் அதிகாரப்பூர்வமாக நிருபர்களிடம் வெளியிட்டார். சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, இன்று பகல், 12.15 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமானது.
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருடன், அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். பதவிப் பிரமாணத்தை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா செய்து வைக்கிறார். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், நல்லக்கண்ணு, தா.பாண்டியன், ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி, சரத்குமார், சேதுராமன் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்
அதேபோல், குஜராத் முதல்வர் மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர், பரதன், தேசிய செயலர், டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலர், பிரகாஷ் கராத் மற்றும் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களது பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், கோட்டைக்கு செல்லும் ஜெயலலிதா, அங்கு கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விவரம், கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்படும். கடந்த கால இருள் பாதையில் இருந்து விலகி, தமிழக மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு புதிய அரசு செயல்படும் என்ற மகிழ்ச்சிச் செய்திகள் இனி வெளிவரும் என்ற கருத்து உருவாகியுள்ளது.
அழைப்பு : முன்னதாக, புதிய அரசு அமைக்க, கவர்னர் விடுத்த அழைப்பை அடுத்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, 11.45 மணிக்கு, கிண்டியில் உள்ள ராஜ்பவனிற்கு சென்றார். அங்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து, ஜெயலலிதா கடிதம் அளித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது.
Labels:
இந்திய செய்திகள்
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் வாழ்த்தும் பாராட்டும்
இன்று தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா அவர்களே! உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அரச தலைவர்கள் எம்மை மறந்த்தாலும் எம் உறவுகளே! நீங்கள் எம்மை மறக்கவில்லை என்ற செய்தி கேட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைந்தோம். தொப்புள்கொடி உறவுக்கு ஓர் அர்த்தத்தைத் தந்து எம்மை நெஞ்சுருக வைத்துவிட்டீகளே!.
வெற்றியின் முடிவுக்கு முன்பே நீதி கேட்டு போர்குற்றம் புரிந்த இராசபக்சாவை கூண்டிலேற்றி விசாரணை செய்யவேண்டும் என முடிசூடவிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமனின் சூளுரை கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தோம்.
மக்கள் திலகம், எம்.ஜி. இராமச்சந்திரன் போல் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஈழத் தமிழர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் நிலைகொள்ள வேண்டும். இது கண்டு சிங்கள் அரசு சிலையாக வேண்டும். இந்திய அரசும் ஈழத் தமிழர் விடயத்தில் இந்திரா காந்தி அம்மையார் போல் உள்ளுணர்வோடு செயற்பட வேண்டும். இதுதானே ஈழதமிழரின் ஆசை, உலகத் தமிழரின் விருப்பம்.
முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே!
உங்கள் வெற்றிக்கு எமது மனமார்ந்த வாழ்த்தும் பாராட்டுககளும்.
உங்கள் ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும், ஐக்கிய நாடு நிபுணர்கள் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு நல்கவேண்டும், ஈழத் தமிழர் இழந்த உரிமையை மீண்டும் பெற எம்மோடு சேர்ந்து நீங்கள் செயற்படவேண்டும். இதுவே நாம் வேண்டுவதும் விரும்புவதும்.
தங்கள் அன்புள்ள
கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
கலாநிதி ராம் சிவலிஙகம்
பிரதிப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
Labels:
இந்திய செய்திகள்
ஞாயிறு, 15 மே, 2011
புதிய தமிழக அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
| தற்பொழுது நடந்து முடிந்த தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்று நாளை பொறுப்பேற்கவுள்ளது. |
| இந்நிலையில் நாளை பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர். 2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர். 3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர். 4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர். 5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர். 6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர். 7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர். 8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர். 9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர். 10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர். 11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர். 12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர். 13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர். 14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். 15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர். 16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர். 17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர். 18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். 19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர். 20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர். 21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர். 22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர். 23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர். 24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர். 25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். 26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். 27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர். 28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர். 29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர். 30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர். 31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர். 32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர். 33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர். 34. என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர். |
Labels:
இந்திய செய்திகள்
வெள்ளி, 13 மே, 2011
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.
பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.
இந்த மக்கள் விரோத,இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.
ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.
தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர். ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை, இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.
Labels:
இந்திய செய்திகள்
தேர்தல் தோல்வி எதிரொலி - முதலமைச்சர் பதவியிலிருந்து கருணாநிதி ராஜினாமா
சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து அவர் வழங்கினார்.
அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 200 இடங்களைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் கருணாநிதி சென்றார்.
அங்கு ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவைச் சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். அதேபோல திமுக அரசின் ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார்.
Labels:
இந்திய செய்திகள்
தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றது. இன்று மாலை அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலில் தமிழக மக்களுக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுக்கு கிடைத்தவெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.
ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கவனம் செலுத்துவேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளையும் 1 1/2 வருடத்திற்குள் நிறைவேற்றுவேன் என்று ஜெயலலிதா கூறினார்.
Labels:
இந்திய செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












