இந்தியப் பெண்ணொருவர் தன்னுடன் ஒருவருட காலம் கணவனாக குடும்பம் நடத்திய நபர் உண்மையில் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஓரிஷா மாநிலத்தின் ரூர்கேலா நகரைச் சேர்ந்த மீனாட்சி கஹதுவா எனும் 26 வயது பெண்ணுக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் தானும் தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் சீதாகாந்த் ரோத்ராய் (வயது 28) என்பவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.
'அவர் எனது குடும்பத்தில் ஒவ்வொருவரையும் கவர்ந்தார். எனது குடும்பம் எங்களது திருமணத்திற்கு பூரண சம்மதம் வழங்கியது.
சீதாகாந்த் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்போது சீதனத்தையும் பெற்றுக்கொண்டார். இன்டிகா கார், தங்க ஆபரணங்கள், 50 ஆயிரம் ரூபா பணம் போன்றவற்றை அவர் எங்களிடமிருந்துப் பெற்றுக்கொண்டார்' என்கிறார் மீனாட்சி
ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஒருவருடகாலமாக அவர் மத ரீதியான காரணங்களைக் கூறி உடலியற் தொடர்புகளை முற்றாக தவிர்த்து வந்தார்.
'சந்தேகமடைந்த நான் பலமுறை அவரது பாலினம் குறித்து அறிய முயன்று தோற்றுப்போனேன்' என்று அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஒரு நாள் அவர் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென குளியலறை கதவை பலவந்தமாக திறந்து பார்த்தேன். எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்து. எனது நீண்ட நாள் அச்சம் உண்மையாகிவிட்டது. அவர் உண்மையில் ஓர் பெண் என அறிந்தேன்' என்கிறார் மீனாட்சி.
இவ்விவகாரம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக