வெள்ளி, 13 மே, 2011
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவும், நோர்வேயில் அரசியல் தஞ்சம் பெறுகிவதற்கும் நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சுமார் 12 புலிகளுக்கு அவ்வாறு இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல நோர்வே தூதரக அதிகாரிகள் ஒத்தாசையாக இருந்துள்ளனர். . விமானப் பயணத்துக்கான டிக்கட் கொள்வனவு, விமான நிலையம் வரை தூதரக வாகனங்களில் கொண்டு செல்லுதல், விசா வழங்குதல் போன்ற ஒத்தாசைகளை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
இவ்விடயம் இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய விபரீதமான செயல்பாடு என்று நோர்வே எதிர்க் கட்சிகள் அரசாங்கத்துக்கெதிராக கொதித்தெழுந்துள்ளனர்.
ஆனாலும் பிரஸ்தாப விடயத்தில் எதுவித தவறும் இருப்பதாக தான் கருதவில்லை என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் அச்செயற்பாட்டை நியாயப்படுத்துகின்றார்
" ஆபத்தில் இருக்கின்ற மக்கள் கூட்டத்தினருக்கு நோர்வே நீண்ட காலமாக உதவி செய்து வருகின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இரு வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்த பிற்பாடுகூட புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் வழக்கு விசாரணை எதுவும் இன்றி மிக நீண்ட காலமாக தடுப்புக் காவலிலும், பாதாள சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அல்லது காணாமல் போய் இருக்கின்றார்கள்.
எனவே நாம் சில வேளைகளில் வரம்பு மீறி செயல்பட வேண்டி இருக்கின்றது, சமாதான முன்னெடுப்புக்களுக்கு அனுசரணையாளராக செயல்பட்டு வந்திருக்கின்றபடியால் மனிதாபிமான கடப்பாடு எமக்கு உண்டு.
ஒரு மக்கள் கூட்டத்தினரால் இன்னொரு மக்கள் கூட்டத்தினர் பல வழிகளிலும் அடக்கி ஆளப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் திட்டமிட்ட வகையில் தீர்த்துக் கட்டல்கள் இடம்பெற்று இருக்கின்றன என்பதை பொறுப்போடு சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக