சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களுக்கும் நாட்டுப்பற்று இருக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளிவந்திருக்கும் ஞாயிறு வாராந்த திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மக்களைப் போன்று இலங்கையின் தமிழ் மக்கள் மத்தியிலும் இலங்கையானது எங்கள் நாடு என்ற எண்ணம் தலைதூக்கியிருக்க வேண்டும். அதாவது பிறந்த நாட்டின் மீது தாய்நாட்டுப் பற்று அனைவருக்கும் அவசியமானது.
அதே போன்று எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை வெளியாரைக் கொண்டு தீர்த்துவிட முடியாது. அதற்குப் பதிலாக நாங்களே எங்களுக்குள்ளான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இணக்கப்பாட்டுக்கான வழியாக இருக்கும்.
நம் நாட்டின் தலைவர்களை சர்வதேசத்திடம் ஒப்படைத்து தண்டனை வாங்கிக் கொடுப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. நம் நாட்டின் தலைவர்கள் நம்முடன் இருந்தாக வேண்டும்.நம் நாட்டின் அரசியல் தலைவர்கள் நம்முடன் இருந்தால் மட்டும் தான் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும், நாட்டை அபிவிருத்தி செய்து கொள்வதற்குமான சூழல் ஏற்படும்.
இலங்கையராகிய நாம் எமது பிரச்சினைகளை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதே நாம் செய்த தவறாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக