யாழ்ப்பாணம் ஊரெழு கிராமத்தை வழித்தோன்றலாகக் கொண்டவரும் சிங்கப்பூர் நாட்டின் பிரபல அரசியல்வாதியும் நன்கு உயர்கல்வி கற்று பொருளாதார நிபுணராக பிரகாசிப்பவருமான திரு தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் சிங்கப்பூர் அரசின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய திரு தர்மன் அரசியலில் மட்டுமல் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியிலும் அதிக பங்கு வகித்தவர் என்று சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
திரு தர்மன் சண்முகரட்ணம் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஒப் எக்கோனொமிக்ஸ் என்ற உயர் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்று முதுமானிப் பட்டத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் பொது நிர்வாகத்துறையில் முதுமானிப்பட்டத்தை அமெரிக்காவின் ஹாவார்ட்ஃ பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1957ம் ஆண்டு பிறந்த திரு தர்மன் இலங்கையை தாக்கிய சுனமி அனர்த்தங்களை நேரடியாக பார்க்க இலங்கை சென்று அங்கு பின்னர் ஊரெழுவில் தனது பாட்டனார் வாழ்ந்த வீட்டையும் சென்று பார்த்து வந்ததாக சிங்கப்பூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளி, 20 மே, 2011
யாழ். ஊரெழு வாசியான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் உதவிப் பிரதமராக நியமனம்.
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக