கனடாவை சேர்ந்த நிறுவனம் ஏரியன் லேப்ஸ். உளவு நிறுவனங்களுக்கு தேவையான எலக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பது "ஏரியன் ஸ்கவுட்" எனப்படும் ரோபோ கமெரா. இதில் உள்ள தொடுதிறன் திரையின் மூலம் முதலில் கூகுள் நிறுவனத்தின் உலக வரைபட மென்பொருள் மூலமாக நமக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக நியூயார்க் என்று தேர்வு செய்தால் ஏரியன் ஸ்கவுட் உடனே புறப்பட்டு நியூயார்க் நோக்கி பறக்கத் தொடங்கும். அங்கு சென்றதும் 500 அடி உயரத்தில் பறந்தபடியே கீழே நடப்பவற்றை தனது டிஜிட்டல் கமெராவில் புகைப்படமாக அல்லது வீடியோ காட்சியாக தொடர்ச்சியாக பதிவு செய்யும்.
கீழே இருந்து பார்த்தால் ரோபோவை கண்டுபிடிக்க முடியாது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் இருந்துகூட தெள்ளத் தெளிவான படங்களை எடுக்கும். பதிவாகும் காட்சிகளை மின்னஞ்சலுக்கோ, ஐபோனுக்கோ அனுப்பிக் கொண்டே இருக்கும்.
இதன் விலை ரூ.22 லட்சம். காரில் மிக வேகமாக செல்பவரின் முகத்தைக்கூட இக்கமெரா தெளிவாக படம் பிடிக்கும். தப்பிச் செல்லும் கொள்ளையரை பிடிக்கவும், மறைந்திருக்கும் குற்றவாளிகளை பிடிக்கவும் இது உதவிகரமாக இருக்கும் என்கிறது ஏரியன் லேப்ஸ் நிறுவனம்.
0 comments:
கருத்துரையிடுக