கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

திங்கள், 9 மே, 2011

எதிர் காலத்தில் காடுகள் அற்ற உலகம்


உலகிலுள்ள சுமார் 230 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதி 2050 ஆம் ஆண்டளவில் அழிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் பலவித உயிர்கள் மற்றும் உலக பொருளாதாரம் போன்றவற்றால் ஏற்படும் தாக்கமே இதற்கான காரணம் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை உலகில் தற்போது ஒரு நிமிடத்துக்கு 35 உதைப்பந்தாட்ட திடல் அளவான பகுதி காடழிப்புக்குட்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காடழிப்பு மற்றும் காடுகளின் தரம்குறைந்து வருதல் போன்றன பாரிய சாவல்மிக்க பிரச்சினைகளாக உருப்பெற்றுள்ளன. இதனால் காடுகளின் பரப்புக்கள் மாத்திரமன்றி தரமும் குறைவடைவதால் பல்வேறு எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் எனவும் உலக வனப்பாதுகாப்பு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஆகவே இவ்வாறு காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டிய அதேவேளை இது தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளில் சூழலியலாளர்கள் ஈடுபடவேண்டும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. விவசாய நடவடிக்கைகளுக்காக காடுகளை அழிப்பதற்கான உரிமை மக்களிடம் உள்ளது.

எனினும் இதனால் காடுகளின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இவை முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். அதேவேளை காடுகளின் சமநிலையை பேணுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக