கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

யாழ்ப்பாண செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்ப்பாண செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2011

யாழ். சித்த மருத்துவ விடுதிக்குள் நுழைந்த திருடன் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!


யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை விடுதிக்குள் சென்ற திருடன்  மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

ஞாயிறு, 22 மே, 2011

யுவதிகள் தூக்கில் தொங்கும் படலம் யாழில் தொடர்கின்றது -மீண்டும் ஒரு யுவதி மரணம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

புதன், 18 மே, 2011

பருத்தித்துறையில் 17 வயது மாணவி தூக்கில் தொங்கி மர்ம மரணம்!!

யாழ். பருத்தித்துறை உயர் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை கல்லூரி வீதியைச் சேர்ந்த முருகானந்தராசா நிஷா (வயது 17) என்பவரே இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கோவிலுக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைக் கண்டு பொலிஸாருக்கு  அறிவித்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை மந்திகை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

திங்கள், 16 மே, 2011

மாவிட்டபுரம் பகுதியில் மீளக்குடியேறிய மக்களின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஈராக் தூதுவர்


வலி.வடக்கு, மாவிட்டபுரம் பகுதிக்கு விஜயம் செய்த ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ் அங்குள்ள மக்களின் பரிதாப நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். தன்னிடம் கைவசம் இருந்த ஒரு லட்சம் ரூபா பணத்தை தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அந்தக் குடும்பங்களுக்குத் தூதுவர் பகிர்ந்தளித்தார்.
வலி. வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள வலித்தூண்டல், கொல்லங்கலட்டி, மாவிட்டபுரம் மற்றும் வித்தகபுரம், இளவாலை வடமேற்கு ஆகிய பகுதிகளுக்கு  ஈராக் தூதுவர் காட்டன் ராஹா கிளவ், கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ்.முரளிதரனுடன் சென்றிருந்தார்.
அங்கு சென்ற தூதுவர் அங்குள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களோடு அளவளாவி "உங்களுக்கு அரச உதவி கிடைக்கிறதா?, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் எந்த மட்டில் கிடைக்கின்றன'' என்று பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் நிலைமைகளை அறிந்துகொண்டார். 
அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பரிதாப நிலைகளை நோில் கண்டும், கேட்டும் அறிந்துகொண்ட ஈராக் தூதுவர், தான் மீண்டும் அப்பகுதிகளுக்கு வருவேன் என்றும் அவ்வாறு வரும்போது பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுடனேயே உங்களைச் சந்திப்பேன் என்றும் உறுதியளித்துச் சென்றார்.

ஞாயிறு, 15 மே, 2011

யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிற நீராக மாற்றம்


யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் தீடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்செய்தியினை எமது யாழ். செய்தியாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் தற்போதைக்கு கடல் நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதற்கான ஆய்வுக்காக அப்பிரதேசக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 10 மே, 2011

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து பொலிஸார் விலகல்:கைதுசெய்யப்பட்ட மாணவர் தடுத்து வைப்பு


யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற மோதலையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அங்கிருந்து விலக்கப்பட்டுள்ளனர். எனினும், மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டமைக்கு மாணவர் தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை(07-05-2011) அன்று முகாமைத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு தொடர்பாக 2ம், 3ம் வருட மாணவர்களிடையே நடைபெற்ற மூர்க்கமான மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் பல்கலைக்கழத்துக்குள் நுழைந்தனர்.

பொலிஸாரைக் கண்டு ஓடியதாகக் கூறப்படும் சில மாணவர்களின் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை எடுத்துச் சென்ற பொலிஸார், அதனை மீட்கச் சென்ற இரண்டு மாணவர்களை மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளனர்.

இவர்கள் நேற்றையதினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டிருக்கும் மாணவர்களில் ஒருவர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர் என்றும், முகாமைத்துவ பீட மாணவர்களின் பிரச்சினைக்கும் இவருக்கும் சம்பந்தமெதுவும் கிடையாது என்றும் தெரிவித்த அவர், அந்த மாணவன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று திங்கட்கிழமை இரவு வரையில் பல்கலைக்கழகப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார், தற்போது அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்திருந்ததுடன், பின்னர் நிர்வாக உயர்பீடத்தில் சில உத்தரவாதங்களையடுத்து போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே.

ஒழுக்காற்று நடவடிக்கைக்காக இடைநிறுத்தப்பட்ட, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பான நிர்வாகத்தின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும், அதனிடையே முகாமைத்துவ பீட மாணவர்களிடையே எழுந்த புதிய சர்ச்சையால் அது குறித்து இன்னமும் நிர்வாகத்துடன் பேசவில்லை என்று மாணவர் ஒன்றியப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

யாழின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றினால் குறையும் சாத்தியம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் சாத்தியம் உள்ளதாகவும் கருதப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் இம் மாதம் 30 ஆம் திகதி மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தேர்தல் திணைக்களத்தினால் உறுதிபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் புதிய வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றதாகவும் இதன்போது பல வழி முறைகள் பின்பற்றப்பட்டதாகவும் வாக்காளர்களாக பதிவதற்கு தவறியவர்கள் முறைப்பாடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடையும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் குகநாதன் கூறினார்.

இதுவரை யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 8 இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்து 80 ஆயிரமாக குறைவடைந்தால் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலைமையில் யாழ். மாவட்டத்திலிருந்து ஒன்பது பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரம் எம்.பி. க்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையினால் குறைவடையலாம் என்று கருதப்படுகின்றது.

எனினும் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட குகநாதன் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்கிடையில் பல தடவைகள் வாக்காளர் இடாப்பு புதுப்பிக்கப்படும். அந்த வகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்த அளவில் குறைவடையும் என்று கூற முடியாது. இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணையாளரே எடுப்பார் என்று கூறினார்.

கணவனால் கற்பிணிப் பெண் எரிக்கப்பட்டார்!!

தீக் காயங்களுடன் கற்பிணிப் பெண் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது வயிற்றுக்குள் இருந்த சிசு இறந்து விட்டது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கற்பிணிப் பெண் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவனால் கொழுத்தப்பட்டு காயமடைந்துள்ளார். இச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோப்பாய் இராஜ வீதியில் வசித்துவரும் 33 வயதுடைய கமலரஞ்சன் வசுமதி என்பவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படுவதுண்டு. அதன் உச்சக்கட்டமாகவே கொளுத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து விசாரித்து வருகின்றோம் என காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கோப்பாய் பிரதேசத்தில் அண்மை நாட்களாக கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் பலர் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவிற்கு சம்பவம் இடம்பெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளை விடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும். எனவும்காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவருக்கு மாவை. கோரிக்கை!


பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவ, பொலிஸ் பிரசன்னத்துக்கு இடமளிக்காத வகையில் செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மாவை சேனாதிராசா.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக் கிடையிலான மோதல் செய்திகள் எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றன. எதிர்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்று, பாரம்பரியத்தைக் காத்து, முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய மாணவர்கள் பொறுமையுடன் தமது பிரச்சினைகளைத் தாமே தீர்க்கவேண்டும்.

பொலிஸ், இராணுவ பிரசன்னத்துக்கும் தலையீட்டுக்கும் இடமளிக்காமல் பல்கலைக்கழக செயற்பாடுகளைத் தொடரவேண்டும் என்று அவர் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 9 மே, 2011

ஐ.நாவுக்கு எதிராக கையெழுத்திட மிரட்டப்படும் யாழ் மக்கள்! : அரச கும்பல்களால் அராஜகம்

ஐ.நாவுக்கு எதிராக ஒப்பமிட கோரி, அரச தரப்பினால் அரங்கேற்றப்படும் கையெழுத்து வேட்டை, யாழ் மாவட்டங்களில் முழு வீச்சில் இடம் பெறத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இதற்காக தெற்கிலிருந்து சென்றுள்ள இனவாத கும்பல் ஒன்று, படைப்புலனாய்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம், யாழ் மத்திய சிறைச்சாலை மற்றும் யாழ் நகர மத்திய பேருந்து நிலையம் என பல இடங்களிலும் இந்த கும்பல் தமது வானங்களை தரித்து நின்றவாறு, வீதியால் சென்றவர்களை மறித்து கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தினருடன் பூரண பாதுகாப்புடன் இடம்பெற்ற இக்கையெழுத்து வேட்டையில், ஒப்பமிடாது தப்பிச்செல்ல முயன்ரவர்கள் வீதிகளில் இருந்து இழுத்து வரப்பட்டதாகவும், சிலர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



பல்கலைக்கழகத்தில், கலாநிதி பட்டம் பெற்ற மதகுரு ஒருவரும், வணக்கத்திற்குரிய கிறிஸ்த்தவ பிரமுகர் ஒருவரும் இவ்வாறு ஒப்பமிட மறுத்த வேளையில், தரதரவென இழுத்து செல்லப்பட்டு ஒப்பம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கும்பல் பின்னர் யாழ் பிரதான வீதி வேம்படி வீதியூடாக ஆஸ்பத்திரி வீதியை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளது.
இந்நடவடிக்கைகளால் அதிருப்தியும் பீதியுமடைந்த யாழ் மக்கள், அப்பாதைகளில் செல்வதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டதுடன், அவசர அவசரமாக கதவுகளை பூட்டி வீட்டிலேயே முடங்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்று முன் தினம் இவ்வாறானதொரு கையெழுத்து வேட்டை, தமிழீழ பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களில் இடம்பெற்றது. தனியார் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான நூறு பேர் கொண்ட குழு ஒன்று இக்கையெழுத்து வேட்டைக்காக, வடபகுதியில் களமிறங்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சனி, 7 மே, 2011

யாழில் மீளக் குடியேறிய மக்களின் விபரங்களை திரட்டும் இராணுவப் புலனாய்வாளர்கள்!


யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் குடியேறியுள்ள மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் தோன்றியிருப்பதாக மீள் குடியேறிய பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மீள் குடியேறியுள்ள பகுகளில் இராணுவத்தினரும், புலனாய்வுப் பிரிவினரும் சென்று குடும்பங்களின் விபரங்களை எடுத்துச் செல்வதுடன், அப்பகுதிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்தால், உடனடியாக புலனாய்வுப் பிரிவினர் சென்று, மக்களுடன் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொள்வதாக தெரியவருகிறது.
அண்மையில் வலிகாமம் வடக்குப் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர், அப்பகுதிக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவர்கள் தொடர்பான விடயங்களை பொதுமக்களிடம் விசாரித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 6 மே, 2011

வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் யாழ் செல்ல மீண்டும் பாஸ் நடைமுறை


வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்று வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் கடவுச்சீட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும் எனக் கேட்கப்படுகின்றனர்.
எதுவித முன் அறிவிப்பும் இன்றித் திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் பார்க்க யாழ். சென்றோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
கொழும்பிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தமது உறவினர்களுடன் நேற்றுக் காலை யாழ். சென்றபோது, ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தால் மீண்டும் கொழும்பு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்ட

வன்னியில் தமிழ் மக்களின் நிலங்களில் சிங்களவர்களின் உல்லாசம்!

வன்னில் இடம்பெற்ற போரில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி மீள்குடியேற்றப்பட்டும், முகாம்களிலும் துன்பம் அனுபவித்துவரும்போது, தென்னிலங்கையில் இருந்து செல்லும் உல்லாசப்பயணிகள் முல்லைத்தீவு கடற்கரையில் உல்லாசமாக கால்ப்பந்து விளையாடுகின்றனர்.
வன்னியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் இராணுவ வலையத்தில் வைக்கப்பட்டு அங்கு தொடர்ந்து மக்கள் காணாமல்போவதும், இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவருவதும் தொடர்கதையாகி வருகின்றது.
தென்னிலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்படும் சிங்களவர்கள் அதிக வசதிகளுடன் அங்கு குடியமர்த்தப்படுவதுடன், அங்கிருந்து செல்லும் உல்லாசப்பயணிகளும் நன்கு பராமரிக்கப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவில் தமிழர்கள் முகாம்களில் வாடுகையில் அங்கு செல்லும் சிங்களவர்கள் தமிழர்களின் நிலங்களில் கால்பந்து விளையாடும் நிலையில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்படும் சிங்களவர்கள் அதிக வசதிகளுடன் அங்கு குடியமர்த்தப்படுவதுடன், அங்கிருந்து செல்லும் உல்லாசப்பயணிகளும் நன்கு பராமரிக்கப்படும் புகைப்படங்களை இலங்கை உல்லாசப் பயணத்துறையும், கொழும்பு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.

யாழில் இருவேறு சம்பவங்களில் ஆசிரியர்களின் தண்டனைக்கு இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மீசாலைப் பகுதியில் ஆசிரியர் மாணவியைத் தண்டித்ததால், மாணவி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
மேற்படி பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததன் காரணமாக ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார்.
இதன்காரணமாக தொடர்ந்து அழுது கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்தார் என்றும் பின்னர் அவர் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து வலயக் கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வேறு பாடசாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை,
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் அரசியல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ச. அனந்தீசன் என்ற மாணவன் வலி தாங்க முடியாமல் பாடசாலை முடிந்தவுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சக மாணவர்களால் அனுமதிக்கப்பட்டார்.
வகுப்பில் பாடம் நடைபெறாத வேளை வகுப்பை விட்டு வெளியே பாடசாலை வளாகத்தினுள் சென்ற மாணவனை ஆசிரியர் எதுவித விசாரணையும் இன்றி மாணவனின் முகத்தில் தாக்கியுள்ளார். இதன்காரணமாக மாணவனின் முகத்தில் கண்டல் போன்ற கட்டி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.குடாவில இவ்வாறு பல சம்பவங்கள் வெளியில் வராமல் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இதுதொடர்பில் கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 5 மே, 2011

யாழில் இருந்து புலம்பெயர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேரின் சொத்துக்கள் பறிப்பு

1948 ஆம் ஆண்டு இலங்கை பிரஜா உரிமை சட்ட இலக்கம் 18 இன் படி சுமார் 11 வீதமான இந்திய வம்சாவளி தமிழரின் பிராஜா உரிமையும் வாக்குரிமையும் இலங்கையில் பறிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பூர்வீக தமிழரின் வாக்குரிமை பறிக்கபட்டள்ளது.

யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் 65 வீதமானவர்களின் வாக்குரிமையே தற்போது பறிக்கபட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என்றும் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது.

இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணிகள் கடந்த 6 மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரை மீளாய்வின் 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும். மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர்.

யாழ் பூர்வீக தமிழர்களாக இருந்து யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடப்பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் 2009 ஆம் ஆண்டு இடாப்பில் இருந்த சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

இவர்களில் 90 வீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 லட்சத்து 16ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார இழப்பு சிறீமா சாஸ்திரி உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கையில் வாக்குரிமை பறிக்கபட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

இதன் ஊடாக யாழ் குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் காணிகள் வீடுகள் சொத்துகள் ஆவணங்கள் அசையா மற்றும் அசையும் சொத்துகள் காணி மற்றும் உறுதிகள் வங்கி வைப்புகள் பாரம்பரிய அடையாளங்கள் சொத்துகள் பூர்வீக ஆதனங்கள் அனைத்தும் அரசுடமையாகின்றது.

இந்த முடிவை இலங்கை அரசு அறிவித்த பின்னர் ஜரோப்பாவில் உள்ள தமிழ் மக்களின் சொத்துகள் காணிகளை வீடுகள் நிலங்கை எதனையும் ஜரோப்பிய தமிழர்கள் விற்கவோ அல்லது உரிமை மாற்றவோ முடியாதவர்களாகின்றனர் என சட்ட ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரிதிநிதித்துவம். வடபகுதிக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை குறைக்கபடும் என தெரியவருகிறது. தேசிய பட்டியல் அங்கத்துவம் பறிபோகும் எனவும் தெரியவருகிறது. மீண்டும் ஒரு மனித சுனாமி.

2004ம் ஆண்டு உருவான சுனாமி அனர்த்ததிற்கு பின்னர் வடபகுதி தமிழர்களின் வாக்குரிமை பறிக்கபட்டு சொத்துகள் அரசுடமையாக்கபட்டுள்ளமை மீண்டும் ஒரு மனித சுனாமி என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

கவ்வியங்காட்டு பகுதியில் இளைஞரால் ஏமாற்றப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்தார்!!

16 வயதுச் சிறுமியொருவர் 27 வயது இளைஞரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.கவ்வியங்காடு கேணியடியைச் சேர்ந்த சிறுமியே கட்டப்பிராயைச் சேர்ந்த இளைஞன் இவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்தவராவார்.

குறித்த சிறுமி உடல்நிலை சரியில்லை எனக் கூறி தாயுடன் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுமியின் தாய் உடனடியாக கோப்பாய் காவல் துறையினரிடம் சென்று முறைப்பாட்டை கொடுத்தார். சிறுமியை விசாரித்த கோப்பாய் காவல் துறையினருக்கு சிறுமி குறித்த இளைஞன் தன்னுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகினதாகவும் தனக்கு பணம் தேவைப்படும் போது குறித்த இளைஞனைக்கேட்ட போது அவ் இளைஞன் தனக்கு 5000 ரூபா தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தன்னை கொக்குவிலில் உள்ள பாழடைந்த வீட்டில் உடல் உறவு கொண்டதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

கோப்பாய் காவல் துறையினர் குறித்த இளைஞனைத் தேடி வந்தனர்.ஆயினும் தலைமறைவாக இருந்து வந்த இளைஞனை கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டார். அவ் இளைஞனை 29ம் திகதி யாழ் நீதி மன்றத்தில் கோப்பாய் காவல் துறையினர் ஆஜர் செய்தனர். குறித்த இளைஞனை விசாரித்த யாழ் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஆனந்தராஜா 14 நாட்கள் நீதி மன்றக் காவலில் வைக்குமாறு  உத்தரவிட்டார்.

வலிகாமம் வடக்கு பகுதியில் மிக விரைவில் மீளக்குடியேற்றம்


வலிகாமம் வடக்கின் ஒருசில பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பணி இன்னும் ஓரிரு வாரத்துக்குள்  ஆரம்பிக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் வலிகாமம் வடக்கின் சில பகுதிகளில் மக்கள் மீளக் குடியமரலாம் என்று யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க  நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.    
       
வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு,  தந்தை செல்வாபுரம், தெல்லிப்பழை, வறுத்தலைவிளான், கொல்லங்கலட்டி, கீரிமலை ஆகிய இடங்களில் இதுவரை இராணுவம் நிலைகொண்டுள்ள சில பகுதிகளிலும் பளை, வீமன்காமம் வடக்கின் ஒரு பகுதி, பளை வீமன்காமம் தெற்கின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் மக்கள் மீள்குடியமர்வதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை இராணுவம் வழங்கியுள்ளது.


மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகளை எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொண்டு இம்மாத இறுதிக்குள் எப்போதாவது மக்களை மீள்குடிமர்த்தலாம் என்று  மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அறிவித்துள்ளார். இப்பிரதேசங்களில் சுமார் 2ஆயிரத்து 750 குடும்பங்கள் மீள்குடியமர்வுக்குத் தயாராக உள்ளனர்.
மீள்குடியமர்த்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாழ். மாவட்டச் செயலகம் மேற்கொண்டதன் பின்னர் ஓரிரு வாரங்களில் அப்பகுதியில் மக்கள் மீள்குடிமர்த்தப்படுவர்  என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் வடமராட்சி கிழக்கில் இதுவரை மீள்குடியமர்த்தப்படாத போக்கறுப்பு, முள்ளியான் ஆகிய பகுதிகளிலும் மக்களை மீள்குடியமர்த்த இராணுவத் தளபதி அனுமதி வழங்கியுள்ளார் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். 

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - உதயன் செய்தியாளர் மீதும் தாக்குதல்


யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. 
யாழ் பல்கலைக் கழகத்தில் ஈ.பி.டி.பி ஆதரவு மாணவனை மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிப்பதற்காக தற்போதைய தலைவரை பல்கலைக்கழகத்திலிருந்து துணைவேந்தர் நீக்கியுள்ளார்.
அதனை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





இதன்போது அச் செய்தியாளர் செய்தி சேகரித்து கொண்டிருந்தபொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது கையில் இருந்த ஒளிப்படக் கருவியும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் ஒளிப்படக்கருவியின் மெமறி சிப் அக்குழுவின் தலைவரான பீடாதிபதி ஒருவரால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்ட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அங்கே இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்டு அவர்களது அறையினுள் அச் செய்தியாளர் நீணட நேரமாகத் தடுத்துவைக்கப்பட்டார்.
தன்னை அலுவலகம் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் செய்தியாளர் கேட்டதற்கு “ நீ கைது செய்யப்பட்டிருக்கிறாய் உன்னை வெளியில் செல்ல விட முடியாது.” என கூறி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த  உதயன் அலுவலக உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நீண்ட வாக்குவாதத்தின் பின் அச் செய்தியாளரை மீட்டு வந்துள்ளனர்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

அடாவடிகளைச் சகிக்க முடியவில்லை மேயரைச் சாடுகின்றார் நிஷாந்தன்

யாழ். மாநகர முதல்வரின் அடாவடித்தனம், தன்னிச்சையான செயற்பாடு, தான்தோன்றித்தனமான தீர்மானங்கள் என்பவற்றை சகிக்க முடியவில்லை.

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட ஈ.பி.டி.பி. அமைப்பாளர்களுக்கு செய்த முறைப்பாடுகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிட்டன.

இதனால் ஏற்பட்ட விரக்தியே ஆளும் தரப்புக்கு அளித்த ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேர்ந்தது என்றார் ஆளும் கட்சி உறுப்பினர் சு.நிஷாந்தன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுடனோ இணைந்து விடவில்லை. 

நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நேரடி பிரதிநிதியாகவே தொடர்ந்தும் செயற்படுவேன். என்னை மேயரால் கட்டுப்படுத்த முடியாது .குற்றச் செயல்கள் என்ன நடந்தாலும் அதனை தட்டிக் கேட்க தவறமாட்டேன் எனக் கூறினார்.

யாழ். நகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பதவி ஏற்ற காலம் தொடக்கம் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக திரட்டிய சான்றாதாரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

நேற்று யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே நிஷாந்தன் இதனைக் குறிப்பிட்டார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

பாழடைந்த வீட்டில் யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த யுவதி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக ஊற்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊற்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.