யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தில் ஈ.பி.டி.பி ஆதரவு மாணவனை மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிப்பதற்காக தற்போதைய தலைவரை பல்கலைக்கழகத்திலிருந்து துணைவேந்தர் நீக்கியுள்ளார்.
அதனை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அச் செய்தியாளர் செய்தி சேகரித்து கொண்டிருந்தபொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது கையில் இருந்த ஒளிப்படக் கருவியும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் ஒளிப்படக்கருவியின் மெமறி சிப் அக்குழுவின் தலைவரான பீடாதிபதி ஒருவரால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்ட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அங்கே இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பலவந்தமாக இழுத்துச்செல்லப்பட்டு அவர்களது அறையினுள் அச் செய்தியாளர் நீணட நேரமாகத் தடுத்துவைக்கப்பட்டார்.
தன்னை அலுவலகம் செல்ல அனுமதிக்குமாறு அவர்களிடம் செய்தியாளர் கேட்டதற்கு “ நீ கைது செய்யப்பட்டிருக்கிறாய் உன்னை வெளியில் செல்ல விட முடியாது.” என கூறி தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த உதயன் அலுவலக உத்தியோகத்தர்கள் அங்கு சென்று நீண்ட வாக்குவாதத்தின் பின் அச் செய்தியாளரை மீட்டு வந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக