மல்லாகம் நீதிமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுவரும் காணியிலுள்ள கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது. அந்த மண்டை ஓடு மனிதனுடைய மண்டைஓடாக இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொலிஸார் அதனை ஆட்டின் மண்டை ஓடு எனக் கூறி எடுத்துச் சென்றனர் எனக் கூறப்பட்டது.நேற்று முன்தினம் குறித்த கிணற்றைத் துப்புரவாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த சமயமே மண்டை ஓடு மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மண்டை ஓட்டை ஆட்டினுடையது எனத் தெரிவித்து எடுத்துச் சென்றனர்.பொலிஸார் அதனை எடுத்துச் சென்ற போது சம்பவ இடத்தில் கிராம சேவகரோ, நீதிபதியோ, சட்டவைத்திய அதிகாரியோ எவரும் சமுகமளித்திருக்கவில்லை.
அத்துடன் பொலிஸார் சம்பவ இடத்தில் தடயங்கள் தொடர்பான புகைப்படங்கள் எதனையும் எடுக்கவில்லை.இந்த மண்டை ஓடு மீட்கப்பட்டது தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது; இது தொடர்பாகத் தமக்கு எதுவித தகவலும் தெரியாது என்றும் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்காக தமக்கு அறியத்தரவில்லை யென்றும் கைவிரித்தார்.
அந்த மண்டை ஓட்டின் புகைப் படத்தைக் காட்டிக் கேட்ட போது;நீதிமன்றம் ஊடாக ஒப்படைக்கும் போதுதான் கருத்துக் கூறமுடியும் . படத்தைப் பார்த்து கூறுவது கடினம் என்றும் தெரிவித்தார்.மீட்கப்பட்ட மண்டையோடு நேற்று மாலை வரை யாழ். போதனா வைத்திய சாலைக்குக் கொண்டு வரப்படவில்லை.
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
மல்லாகத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டு வரும் காணியிலுள்ள கிணற்றில் மண்டை ஓடு
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக