யாழ். மாநகர முதல்வரின் அடாவடித்தனம், தன்னிச்சையான செயற்பாடு, தான்தோன்றித்தனமான தீர்மானங்கள் என்பவற்றை சகிக்க முடியவில்லை.
இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட ஈ.பி.டி.பி. அமைப்பாளர்களுக்கு செய்த முறைப்பாடுகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிட்டன.
இதனால் ஏற்பட்ட விரக்தியே ஆளும் தரப்புக்கு அளித்த ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேர்ந்தது என்றார் ஆளும் கட்சி உறுப்பினர் சு.நிஷாந்தன். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுடனோ இணைந்து விடவில்லை.
நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நேரடி பிரதிநிதியாகவே தொடர்ந்தும் செயற்படுவேன். என்னை மேயரால் கட்டுப்படுத்த முடியாது .குற்றச் செயல்கள் என்ன நடந்தாலும் அதனை தட்டிக் கேட்க தவறமாட்டேன் எனக் கூறினார்.
யாழ். நகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பதவி ஏற்ற காலம் தொடக்கம் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக திரட்டிய சான்றாதாரங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே நிஷாந்தன் இதனைக் குறிப்பிட்டார்.
வியாழன், 28 ஏப்ரல், 2011
அடாவடிகளைச் சகிக்க முடியவில்லை மேயரைச் சாடுகின்றார் நிஷாந்தன்
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக