ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படலாம். இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Primo Pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். எந்த இணைய பக்கத்தை PDFஆக சேமிக்க வேண்டுமோ அந்த பக்கத்தை திறந்து கொண்டு File மெனுவில் Printஐ அழுத்த வேண்டும்.
பின் ஓபன் ஆகும் விண்டோவில் Primo Pdf என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Create PDFஐ அழுத்த வேண்டும்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இணைய பக்கமானது Pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும். PDF உருவாவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் Save Asல் Specific Folder என்பதை தேர்ந்தெடுக்கவும்.
0 comments:
கருத்துரையிடுக