விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் ஈழத் தமிழர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டது பற்றி ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டு இருந்தது. |
அதில் இலங்கைக்கு எதிராக ஏராளமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் பலர் நேற்றைய தினம் உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐ.நா. சபையின் அறிக்கையின் படி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது மஹிந்தவின் உருவ பொம்மையை தூக்கில் மாட்டி வக்கீல்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் மஹிந்தவின் உருவப் பொம்மையை வக்கீல்கள் தீயிட்டுக் கொளுத்தினர் |
வெள்ளி, 29 ஏப்ரல், 2011
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் ராஜபக்ஷே உருவ பொம்மை எரிப்பு
Labels:
பிரதான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக