இன்று ஊடகங்களில் வெளியான போர்குற்ற படங்களில் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல வெற்றிச் சமர்க்களங்களில் களமாடிய தளபதி பானு இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வேதனைக்குரியதே.
2008 ல் மன்னார் களமுனையில் சாதனை புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது கேணல் பானு "எமது பலத்தை நிரூபிக்கும்போது சர்வதேசம் வலிந்து உதவும்" என தெரிவித்திருந்தார்.
அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.
அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் போர் மூலோபாயங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கு நாம் ஒன்றுதிரண்டு உழைக்க வேண்டும்.நாம் எமது நிலங்களை எதிரியின் வல்வளைப்பு வலிந்த தாக்குதல் போரில் இழந்திருக்கின்றோம். ஆனால் நாம் எமது பலத்தை இழக்கவில்லை. நாம் போரில் வெற்றி பெறுவது உறுதி.
2009 ம் ஆண்டை தனது "படையினரின் ஆண்டு" எனப் பிரகடனப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ச. அவரது படையினருக்கான ஆண்டை நாம் அவர்களது "அழிவு ஆண்டு" என மாற்றுவோம்.
எமது மக்கள் சிறிலங்கா படைத் தாக்குதல் மற்றும் வல்வளைப்புக்களால் இடம்பெயர்ந்து பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். மிக மோசமான அவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இறுதி வெற்றி யாருக்கு என்பதை நாம் பார்க்கலாம்.
சிங்கள அரசு வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டு போரை நடத்துகின்றது. நாம் எமது மக்களின் பலத்தில் நிற்கின்றோம். நாம் பலத்தை நிரூபிக்கின்ற போது வெளிநாடுகள் தாமாகவே என்ன உதவி வேண்டும் என்று கேட்கும் நிலை வரும்.
நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வீரமிக்க தளபதி சிங்கள இராணுவத்தின் கொடூரமான சீத்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்தமை தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாததொன்றே.
0 comments:
கருத்துரையிடுக