பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் 5 ஆண்டு காலமாக பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்னதாக அறிவித்திருந்தார்.
அபோதாபாத்தில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சண்டை குறித்து அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்தும் உள்ளனர்.
பெண் ஒருவரை மனித கேடயமாக வைக்க முயன்ற ஒசாமாவை தங்கள் படையினர் சுட்டு வீழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தனர். இப்படியான செய்திகள் வெளியாகியுள்ள இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த டான் (dawn) நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்று, ஒசாமாவை சுட்டது அமெரிக்கப் படைதானா என்ற சந்தேகத்தை ஆழமாக எழுப்பியுள்ளது.
(குறித்த பத்திரிகைச் செய்தி இவ்வாறு தொடர்கின்றது: Was Osama killed by US troops or his own guard?)
அமெரிக்க சிறப்புப் படையினர் ஹெலிகாப்டரில் வந்து நள்ளிரவில் தாக்குதல் நடத்திய அடுத்த சில நிமிடங்களில், சம்பவ இடத்தைப் பார்த்த அதிகாரி ஒருவர் கூறிய விடயங்களின் அடிப்படையில் அந்தச் செய்தியில் ஆராயப்பட்டுள்ளது. தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த பாகிஸ்தான் அதிகாரி, "துப்பாக்கிச் சண்டை நடந்தச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நிலையில், ஒசாமாவை மிக நெருக்கமாகச் சென்று, அவரது தலையில் ஒற்றைத் துப்பாக்கிக் குண்டால் சுட்டு வீழ்த்தியிருக்க சாத்தியமில்லை.

தங்களால் தப்பமுடியாத சூழலை உணர்ந்து, ஒசாமாவே தனது பாதுகாவலரைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைத்திருக்கக் கூடும்,' என்று அந்த அதிகாரி விவரித்ததாக அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமாவின் பாதுகாவலர்கள் மூவரும் சுட்டு வீழ்த்தப்பட, பின் லேடனின் உடலை மட்டும் கைப்பற்றிச் சென்றிருக்கிறது, அமெரிக்கப் படை.
ஒசாமா பின் லேடன் சடலத்தின் படங்களையோ அல்லது வீடியோவை அமெரிக்கா இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடாத நிலையில், பாகிஸ்தானின் பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது..
0 comments:
கருத்துரையிடுக