1948 ஆம் ஆண்டு இலங்கை பிரஜா உரிமை சட்ட இலக்கம் 18 இன் படி சுமார் 11 வீதமான இந்திய வம்சாவளி தமிழரின் பிராஜா உரிமையும் வாக்குரிமையும் இலங்கையில் பறிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பூர்வீக தமிழரின் வாக்குரிமை பறிக்கபட்டள்ளது.
யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில் 65 வீதமானவர்களின் வாக்குரிமையே தற்போது பறிக்கபட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என்றும் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது.
இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணிகள் கடந்த 6 மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரை மீளாய்வின் 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும். மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர்.
யாழ் பூர்வீக தமிழர்களாக இருந்து யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடப்பெயர்ந்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் 2009 ஆம் ஆண்டு இடாப்பில் இருந்த சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
இவர்களில் 90 வீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இந்த மீளாய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இந்த மாதம் 31 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அந்த வாக்காளர் இடாப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 8 லட்சத்து 16ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார இழப்பு சிறீமா சாஸ்திரி உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கையில் வாக்குரிமை பறிக்கபட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.
இதன் ஊடாக யாழ் குடா நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் காணிகள் வீடுகள் சொத்துகள் ஆவணங்கள் அசையா மற்றும் அசையும் சொத்துகள் காணி மற்றும் உறுதிகள் வங்கி வைப்புகள் பாரம்பரிய அடையாளங்கள் சொத்துகள் பூர்வீக ஆதனங்கள் அனைத்தும் அரசுடமையாகின்றது.
இந்த முடிவை இலங்கை அரசு அறிவித்த பின்னர் ஜரோப்பாவில் உள்ள தமிழ் மக்களின் சொத்துகள் காணிகளை வீடுகள் நிலங்கை எதனையும் ஜரோப்பிய தமிழர்கள் விற்கவோ அல்லது உரிமை மாற்றவோ முடியாதவர்களாகின்றனர் என சட்ட ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் பிரிதிநிதித்துவம். வடபகுதிக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்புரிமை குறைக்கபடும் என தெரியவருகிறது. தேசிய பட்டியல் அங்கத்துவம் பறிபோகும் எனவும் தெரியவருகிறது. மீண்டும் ஒரு மனித சுனாமி.
2004ம் ஆண்டு உருவான சுனாமி அனர்த்ததிற்கு பின்னர் வடபகுதி தமிழர்களின் வாக்குரிமை பறிக்கபட்டு சொத்துகள் அரசுடமையாக்கபட்டுள்ளமை மீண்டும் ஒரு மனித சுனாமி என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
வியாழன், 5 மே, 2011
யாழில் இருந்து புலம்பெயர்ந்த 4 லட்சத்து 30 ஆயிரம் பேரின் சொத்துக்கள் பறிப்பு
Labels:
யாழ்ப்பாண செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக