கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 5 மே, 2011

வலிகாமம் வடக்கு பகுதியில் மிக விரைவில் மீளக்குடியேற்றம்


வலிகாமம் வடக்கின் ஒருசில பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பணி இன்னும் ஓரிரு வாரத்துக்குள்  ஆரம்பிக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
 எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் வலிகாமம் வடக்கின் சில பகுதிகளில் மக்கள் மீளக் குடியமரலாம் என்று யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க  நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.    
       
வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு,  தந்தை செல்வாபுரம், தெல்லிப்பழை, வறுத்தலைவிளான், கொல்லங்கலட்டி, கீரிமலை ஆகிய இடங்களில் இதுவரை இராணுவம் நிலைகொண்டுள்ள சில பகுதிகளிலும் பளை, வீமன்காமம் வடக்கின் ஒரு பகுதி, பளை வீமன்காமம் தெற்கின் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் மக்கள் மீள்குடியமர்வதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை இராணுவம் வழங்கியுள்ளது.


மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகளை எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் மேற்கொண்டு இம்மாத இறுதிக்குள் எப்போதாவது மக்களை மீள்குடிமர்த்தலாம் என்று  மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அறிவித்துள்ளார். இப்பிரதேசங்களில் சுமார் 2ஆயிரத்து 750 குடும்பங்கள் மீள்குடியமர்வுக்குத் தயாராக உள்ளனர்.
மீள்குடியமர்த்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யாழ். மாவட்டச் செயலகம் மேற்கொண்டதன் பின்னர் ஓரிரு வாரங்களில் அப்பகுதியில் மக்கள் மீள்குடிமர்த்தப்படுவர்  என்றும் அரச அதிபர் தெரிவித்தார்.
அத்துடன் வடமராட்சி கிழக்கில் இதுவரை மீள்குடியமர்த்தப்படாத போக்கறுப்பு, முள்ளியான் ஆகிய பகுதிகளிலும் மக்களை மீள்குடியமர்த்த இராணுவத் தளபதி அனுமதி வழங்கியுள்ளார் எனவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார். 

0 comments:

கருத்துரையிடுக