போர் பங்காளியாக அமெரிக்கா தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தமது பொறுப்பை இன்னும் நிறைவேற்றவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் ரொபட் ஒ பிளக், இரகசிய செய்தியுடன் இலங்கை வந்துள்ளார். எனினும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தும் வரை அவர் அதனை வெளியிடமாட்டார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இலங்கை தொடர்பில் இரண்டு அனுகுமுறைகளை கையாள்கிறது. ஒன்று இலகுவான அணுகுமுறை இரண்டாவது கடுமையான அணுகுமுறை.
இதில் பிளேக் மற்றும் இராஜாங்க திணைக்களம் இலகு அணுகுமுறையையும் ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகம் கடுமையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் ரொபோ்ட் ஒ பிளேக், அமெரிக்க தூதுவராக இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் பங்காளியாக செயற்பட்டார். அத்துடன் தமது நாடான அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி திரட்டல்களுக்கு எதிரான நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டார்.
எனினும் 2008 ஆண்டு ஒக்டோபர் 25 ம் திகதி சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பிளேக், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை அரசியல் தீர்வு ஒன்றின் மூலம் தோற்கடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
2009 ம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதியன்று கொழும்பில் வைத்து கருத்துரைத்த அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் தற்போது தோற்கடிக்கப்பட்டிருப்பதால், 13 வது அரசியல் அமைப்பின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்த பின்பே, தமிழர்களுக்கான தீ;ர்வு காணப்படவேண்டும் என்ற அமெரிக்காவின் எண்ணம் தெளிவாகியுள்ளது.
இதன் காரணமாகவே பிரபாகரனின் நடமாட்டங்களை அவதானிப்பதற்காக அமெரிக்கா, இலங்கைக்கு செய்மதிகளையும் வழங்கியது.
இந்தநிலையில் அமெரிக்கா தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளது. எனினும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தமது பொறுப்பை இன்னும் நிறைவேற்றவில்லை.
இவ்வாறான சூழ்நிலையிலேயே ரொபோ்ட் ஓ பிளேக்கின் இலங்கை விஜயம் இடம்பெறுகிறது.
0 comments:
கருத்துரையிடுக