சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா பிராந்தியத்திற்கான துணைவெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கான இரண்டு நாள் பயணதை முடிந்துக்கொண்டு நாடு திரும்பும் போது நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதிகாரப்பரிர்வை வழங்குவதன் மூலம் அங்கு காணப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வும் முன்வைக்கப்பட வேண்டும்.
இதனை மேற்கொள்வதாக சிறீலங்கா அரசு முன்னர் பல தடவைகள் தெரிவித்திருந்தது. ஆனால் அது பொய்களைத் தான் உறுதிப்படுத்தி வருகின்றது உண்மைகளை அல்ல.
சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் நியாயமான, காத்திரமான விசாரணைகள் தேவை என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. மனித உரிமை மீறல்களின் ஈடுபட்டவர்களை தண்டிப்பது சிறீலங்கா அரசின் கடமையாகும்.
ஆனால் சிறீலங்கா அரசு அதனை மேற்கொள்ளத் தவறினால் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றின் அவசியம் ஏற்படும். எனவே சிறீலங்கா தனது நடவடிக்கைகளை முதலில் ஆரம்பிக்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
சிறீலங்காவில் காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இறந்தவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரங்களும் வழங்கப்பட வேண்டும். தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளும் பேச்சுக்களில் ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு சிறீலங்கா அரசு முற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வியாழன், 5 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக