கணனி உலகின் புதிய தகவல்களை உங்களுக்கு உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் ஒரே தமிழ் கணனி சஞ்சிகை Elate இன் Computer Times உடனே வாங்கி படியுங்கள் தொடர்புகளுக்கு elatecomputer@gmail.com!

வியாழன், 5 மே, 2011

மஹிந்த சகோதரர்களுக்கிடையில் அதிகரித்திக்கும் மோதல் : பின்னணியில் சரத்

நடந்த முடிந்த இறுதிக்கட்ட போர் வரை பிரிக்க முடியாத உடன் பிறப்புக்களாக இருந்த மகிந்த, கோத்தபாய சகோதரர்கள் இப்போது மோதல் நிலைக்கு வந்துள்ளனர். காசியப்பன் மொகலாயன் என்ற சகோதரர்கள் சிங்கள மகாவம்சத்தில் மோதி அழிந்த கதையைப் படித்திருப்பீர்கள்.

வெள்ளைக் கொடியுடன் சென்று சரண்புக முயற்சித்த நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்ட விவகாரம் நீதி மன்றம் வரை சென்றுள்ளது. எல்லாம் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வாயைத் திறந்ததால் வந்த வினைதான்.

18 மே 2009 அதிகாலை இந்தச் சுட்டுச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பில் மே 04ம் திகதி நீதி மன்ற விசாரணைக்கு உட்பட இருக்கிறது. 58ம் படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்தச் சூடு நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார்.

பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, ஆகியோருக்கும் ஐ.நாவுக்கும், நோர்வேக்கும். அறிவித்த பிறகு நடேசன் தலைமையிலானோர் சரண் புகச் சென்றனர். ஆனால் திடீர்ரென அவர் சுட்டுக் கொல்லும் உத்தரவை கோத்தபாய வழங்கினார்.

13 டிசம்பர் 2009ம் திகதி சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் “கோத்தா அவர்களைச் சுடும்படி உத்தரவிட்டார்” என்று சரத் பொன்சேக்கா செவ்வி வழங்கினார். இதைச் சரத் பொன்சேகா 20 டிசெம்பர் 2009 சன்டே லீடருக்கு வழங்கிய இன்னொரு செவ்வியில் மழுப்பலாக மாற்றிவிட்டார்.

இது சம்பந்தமான வழக்கு மே 04ம் திகதி விசாரணைக்கு வரவிருக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகா சாட்சியம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாரதூரமான விடயங்களை வெளிப்படுத்தாமல் அவரைத் தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச கடும் முயற்சி எடுக்கிறார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்து அவரைத் தனது நட்பு சக்தியாக மாற்றும் யோசனை மகிந்தாவுக்கு வழங்கப்படுகிறது.  இதற்கு கோத்தபாயா கடும் எதிர்ப்புக் காட்டுகிறார். இது தொடர்பாக அண்ணனும் தம்பியும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் விடுமளவுக்கு விரோதித்துக் கொண்டுள்ளனர்.

இருவரும் கொலைகாரர்கள். யார் தலை உருளுமோ தெரியவில்லை. கோத்தபாயா புத்திசாலித்தனமாகப் பின்வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குச் சென்று விட்டார்.வழக்கு முடிந்த பிறகு அவர் நாடு திரும்பக் கூடுமென்று தகவல் கிடைத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக