மே முதலாம் திகதி டென்மார்க்கில் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப் பயணம் நேற்று மாலை ஐந்தாவது நாளாக Rendsburg எனும் இடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை அவர்களுடைய பயணம் Hamburgஎனும் நகரத்தை நோக்கி செல்ல இருக்கின்றது.
நேற்று அவர்களுடைய பயணம் Neumünsterஎனும் நகரத்தை செல்ல திட்டமிடப்பட்டாலும் ஓடும் பாதைகளின் சிரமங்களால் தாமதமாக முன்னெடுக்கப்பட்டது.
இவர்களுடைய நீதி தேடி முன்னெடுக்கப்படும் பயணம் 18 . மே .2011 போர்குற்ற நாள் அன்றுDen Haag நகரத்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் வந்தடையும்.
அங்கு டென்மார்க் தமிழர் பேரவையின் சட்டத்தரணி ஊடாக கொடுக்கப்பட்ட ஆவணங்களும் அத்தோடு மனுவும் அதேவேளையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்துக்களைச் சேகரித்து அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ள மனுவில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை தொடர்பு கொள்வதற்கு பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
நேரடித் தொடர்பு : (0049 ) 01746356387
0 comments:
கருத்துரையிடுக