ஐநா நிபுணர் குழு பரிந்துரைத்தவாறு சிறிலங்கா அரசினால் தமிழினத்தின் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் - இனப்படுகொலை - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல்- இராணுவ தலைவர்கள் மீது சர்வதேச விசாரணைய நடத்த உத்தரவிடுமாறு கோரியும் அனைத்துலக ஆணையம் ஒன்றினை நிறுவுமாறு நியூயோர்க்கிலும்-ஜெனீவாவிலும் உள்ள ஐ.நா. பீடத்தின் முனனால் அனைவரையும் அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. .
இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்த அரச பயங்கரவாத்த்தின் ஒரு சட்டபூர்வ சாட்சியமாக ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை அமைந்திருக்கின்றது.
அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை மற்றும் அனைத்துலக ஆணையம் ஆகியனவற்றை நிறுவ செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் உத்தரவிடவேண்டுமென சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களும் - நாடுகளும் - தலைவர்வளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்சமூகமும் அணிதிரளவேண்டியது காலத்தின் கடமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தேசிய துக்க நாளான மே-18 வியாழக்கிழமை நியூ யோர்க் - ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநாவின் முன்னால் மாபெரும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மக்களின் காத்திரமான அழுத்தத்தை ஐநாவுக்கு கொடுப்பதற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் இந்த ஒன்றுகூடல் சிறப்புற அமைய உறுதுணை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
நியூயோர்க் - ஜெனீவா ஒன்றுகூடல்களுக்கான பயண ஒழுங்குகள் நாடுவாரியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:
தொடர்புகளுக்கு : கனடா : 416 291 7474 - 647 822 8062 - 416 829 1362
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22
பிரான்சு : 06 99 90 06 08 - 06 62 36 50 07
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22
பிரான்சு : 06 99 90 06 08 - 06 62 36 50 07
மேலதிக நாடுகளுக்கும் - விபரங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளிடம் பெற்றுக் கொள்ளலாம்.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
0 comments:
கருத்துரையிடுக