டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Taskbar என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே தரப்பட்டுள்ளதைக் காணலாம்.
1. Autohide the taskbar: இந்த பெயரிலிருந்தே இது என்ன செயல்பாட்டைக் கொண்டுள்ளது என்று அறியலாம். இது தேர்ந்தெடுக்கப்பட்டால் டாஸ்க்பாரினை நீங்கள் மாற்றவோ, சுருக்கவோ முடியாது. இடமும் மாறாது.
தவறுதலாக நீங்கள் மவுஸ் கர்சரை டாஸ்க்பாரில் வைத்து இழுத்துவிட்டுப் பின்னர் ஐயோ இடம் மாறிவிட்டதே என்ற பிரச்னை எல்லாம், இந்த டூல் மூலம் டாஸ்க்பாரை லாக் செய்துவிட்டால் வராது.
2. Use small icons: உங்கள் டெஸ்க்டொப் முழுவதும் உங்களுக்கான இடமாக இருக்க வேண்டும் என எண்ணினால் இந்த ஆப்ஷன் உங்களுக்கு அவசியம் தேவை. இதனைக் கிளிக் செய்தால் டாஸ்க்பார், புதருக்குள் பாம்பு போல மொனிட்டருக்குக் கீழாக இருக்கும்.
டாஸ்க்பார் வழக்கமாக இருக்கும் இடத்தில் கர்சரைக் கொண்டு சென்றால் சீறிக் கொண்டு வரும் சர்ப்பம் போல டாஸ்க்பார் எழுந்து வரும். வேடிக்கையாக இருக்கும். கர்சரை அந்த இடத்திலிருந்து எடுத்து விட்டால் உடனே டாஸ்க்பார் மறைந்துவிடும்.
உங்கள் டாஸ்க்பாரில் உள்ள ஐகான்கள் பெரிய அளவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இதில் கிளிக் செய்திடுங்கள். ஐகான்கள் அனைத்தும் சிறியதாக மாறிவிடும்.
விண்டோஸின் எந்த பதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் டாஸ்க்பாரினை மொனிட்டரின் மற்ற இடங்களிலும் வைத்துக் கொள்ளும் ஆப்ஷன் கிடைக்கும். டாஸ்க்பாரின் மீது கர்சரை வைத்து இழுத்துச் சென்று விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக